பினாங்கில் புதிய விமான நிலையமா? மாநில அரசுக்கே தெரியவில்லை

செபராங் பிறையில் ஒரு புதிய விமான நிலையம் அமைக்கும் இரண்டு பரிந்துரைகள் குறித்து பினாங்கு அரசுக்கே தெரியவில்லை.

முதலைமைச்சர் செள கொன் இயோ மாநிலத்தில் அல்லது அவ்வட்டாரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதை வரவேற்றார்.

“ஆனால், த ஸ்டாரில் அறிவிக்கப்பட்டிருப்பதுபோல் புதிய விமான நிலையம் அமைக்கும் இரண்டு பரிந்துரைகள் குறித்து மாநில அரசுக்கு எதுவும் தெரியாது”, என்று செள ஓர் அறிக்கையில் கூறினார்.

செள, இன்றைய த ஸ்டார் நாளேட்டில், செபராங் பிறையில் ஒரு விமான நிலையம் அமைக்க இரண்டு நிறுவனங்கள் பரிந்துரைத்திருக்கும் செய்தி வெளிவந்திருப்பது குறித்துக் கருத்துரைத்தார்.

“பினாங்கு அரசு, கட்டப்படும் எந்தவொரு புதிய விமான நிலையமும் பாயான் லெப்பாஸ் அனைத்துலக விமான நிலையத்துக்கோ மாநில மேம்பாட்டுக்கோ பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற அதன் பழைய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது.

“எந்தவொரு புதிய பரிந்துரையும் பினாங்குக்கும் அதன் மக்களுக்கும் நன்மை தருவதாக இருக்க வேண்டும்”, என்றாரவர்.