‘அமைச்சருடன் ஒரே படுக்கையில் இருப்பது நானே’- ஆடவரின் அதிர்ச்சி வாக்குமூலம்

செக்ஸ் வீடியோ ஒன்றில் அமைச்சர்போல் தோற்றமளிக்கும் ஒருவருடன் ஒரே படுக்கையில் இருக்கும் ஆடவர் வாக்குமூலம் ஒன்றைப் பதிவேற்றி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

அந்தப் பாலியல் காணொளியில் காணப்படும் ஆடவர் தானே என்று கூறிக்கொண்ட முகம்மட் ஹவீஸ் அப்துல் அசீஸ், தன்னுடன் இருப்பவர் ஓர் அமைச்சர் என்றார்.

அமைச்சர்மீது எம்ஏசிசி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஹவீஸ், அவர் தலைவராக இருக்க தகுதியற்றவர் என்றார்.

அவரது வாக்குமூலம் இன்று காலை அவரது முக நூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில் அவர் அந்த அமைச்சரின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், சம்பந்தப்பட்ட அமைச்சரின் கருத்தை அறியாமல் அவரது பெயரை வெளியிடுவதை மலேசியாகினி நிறுத்தி வைத்துள்ளது.