எத்தியோப்பியாவில் உள்ள ஓர் ஆண் குழந்தையை பிரசவித்த அரை மணி நேரத்துக்கு பின் மருத்துவமனை படுக்கையிலேயே தனது தேர்வுகளை எழுதியுள்ளார்.
21 வயதாகும் அல்மாஸ் டெரீஸ் மேற்கு எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர். கர்ப்பிணியாக இருந்தபோது பிரசவம் நடப்பதற்கு முன்னரே தேர்வுகளை முடித்து விட தீர்மானித்திருந்தார். ஆனால் ரம்ஜான் காரணமாக அவரது உயர்நிலைப் பள்ளித் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது.
திங்கள் கிழமையன்று அவருக்கு தேர்வுகள் நடப்பதற்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. குழந்தையைப் பெற்றெடுத்தப் பின் அவர் தனது தேர்வுகளை எழுதினர்.
”கர்ப்பிணியாக இருக்கும்போது படிப்பது ஒன்றும் பிரச்சனையாக இருக்கவில்லை. அடுத்த ஆண்டு வரை நான் தேர்ச்சி பெற காத்திருக்க விரும்பவில்லை” என்றார்.
ஆங்கிலம், அம்ஹாரிக், கணிதம் உள்ளிட்ட தேர்வுகளை திங்கள் கிழமையன்று மருத்துவமனையில் எழுதினர். அடுத்த இரண்டு நாள்களில் நடக்கும் தேர்வுகளை அவர் தேர்வு மையத்துக்குச் சென்று எழுதவுள்ளார்.
”எனக்கு பிரசவம் ஒன்றும் அவ்வளவு கடினமான இருக்கவில்லை ஆகையால் நான் அவசரமாக பரீட்சை எழுத உட்கார்ந்தேன்” என பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.
மருத்துவமனையில் தனது மனைவியை தேர்வு எழுதுவதற்கு அவர் படித்த பள்ளியை இணங்கச் செய்ததாக அல்மாசின் கணவர் தடீஸ் துலு தெரிவித்தார்.
எத்தியோப்பியாவில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை இடையில் கைவிட்டுவிட்டு பின்னர் படிப்பை முடிப்பது அங்குள்ள பள்ளி மாணவிகளிடம் பரவலாக காணப்படும் விஷயம்.
அல்மாஸ் தற்போது கல்லூரியில் சேர்வதற்கான இரண்டு வருட படிப்பை முடிக்க வேண்டும் என விரும்புகிறார்.
பிபிசியிடம் பேசிய அல்மாஸ், தேர்வுகளை சிறப்பாக எழுதியிருப்பதாகவும் தனது ஆண் குழந்தை நன்றாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
-BBC_Tamil