அமெரிக்கா – சீனா இடையே வர்த்தக போர் காணப்படும் நிலையில், ஜி20 மாநாட்டின் போது சீன ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – சீனா இடையே வர்த்தக போர் நீடித்து வருகின்றது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா அதிக அளவில் வரி விதித்து வருகின்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் ஜி 20 மாநாடு ஜப்பானில் இந்த மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. எனினும் இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் அதேநேரம் இந்த சந்திப்பு நடைபெறவில்லை என்றால், புது வரிவிதிப்பு அமுல்படுத்தப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்ற நிலையில், முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள இருதரப்பும் இவ்வாறு முனைப்பு காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-tamilmirror.lk