ஹாங்காங்கில் போராட்டத்திற்கு காரணமான குற்றவாளி என சந்தேகிக்கும் நபரை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்ட மசோதாவை கொண்டு வந்ததற்காக மன்னிப்பு கோரினார் ஹாங்காங் தலைவர் கேரி லேம்.
போராட்டம் செய்த மக்கள் இந்த மசோதாவை திரும்ப பெறவும் கேரி லேம் பதவி விலகவும் கோரிக்கை விடுத்தனர்.
1997ல் இருந்து ஒரு நாடு இரண்டு அமைப்பு என்ற முறைப்படி ஹாங்காங் சீனாவின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது. இதன்மூலம் சீன மக்களுக்கு கிடைக்காத சுதந்திரம் ஹாங்காங் மக்களுக்கு கிடைக்கும்.
இந்த மசோதா மூலமாக ஹாங்காங்கின் மக்கள் சீனாவின் பாதுகாப்பற்ற சட்ட முறைகளுக்குள் வருவார்கள். அது அந்த நகரத்தின் சட்ட சுதந்திரத்தைப் பாதிக்கும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த மசோதா நிறுத்திவைக்கப்பட்ட பின்பும் இதுவரை நடந்ததில் மிகப்பெரிய போராட்டம் ஞாயிறு அன்று நடந்தது. இதில் சுமார் 2 மில்லியன் மக்கள் கலந்து கொண்டதாக ஒருங்கிணைப்பாளர் கூறுகின்றனர்.
கேரி லேம் கூறியதாவது,
”இந்த கலவரத்திற்கு தான் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்கவேண்டும் எனவும் அதற்காக தான் ஹாங்காங் மக்களிடையே மன்னிப்பு கேட்பதாக கூறுகிறார் ஹாங்காங்கின் தலைமை அதிகாரி .
இந்த சட்டத்தை திரும்ப பெறவில்லை, மேலும் அவரும் பதவி விலகவில்லை என பிபிசி அவரிடம் கேட்டபோது அவர் மக்களின் குரலை கேட்ததால் தான் இந்த சட்டத்தை நிறுத்தி வைத்ததாக கூறினார்.
இந்த சட்டத்தின் குறைகளைப் பற்றி பேசும்வரையில் அரசாங்கம் இந்த சட்டத்தை நிறைவேற்றாது” என கூறினார்.
- ‘தமிழ் வாழ்க’ – நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பிக்களின் முழக்கங்கள் என்ன?
- ஓம் பிர்லா: புதிய மக்களவை சபாநாயகரின் சொத்து மதிப்பு எவ்வளவு?
போராட்ட முடிவுக்கு விரும்பாத பேச்சு
மக்கள் தன்னுடைய செயலால் திருப்தியாக இல்லை என்றும் தான் இன்னும் சிறப்பாக செயலாற்ற வேண்டும் என புரிந்து கொண்டதாக கூறினார்.
புரட்சியாளர்கள் அவருடைய செய்தியாளர்களின் சந்திப்பில் அவர் சட்ட மசோதாவை திரும்ப பெறாததையும் பதவி விலகாததையும் குறித்து கோபத்தில் இருந்தார்கள். மேலும் ஜூன் 9 ஆம் தேதியிலிருந்து 12 ஆம் தேதி வரை மன்னிப்பு கேட்க நிறைய வாய்ப்புகள் இருந்ததாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
லேம் எப்போதும் மக்களுடன் தொடர்பில் இல்லாததற்காக விமர்சிக்கப்படுவார். அவருடைய இந்த பதில் அவரைப் பற்றிய இந்த கருத்தை மாற்றியதாக தெரியவில்லை .
போராட்டக்காரர்களின் பதில்
லேம் பதவி விலகாததால் தாங்கள் அதிருப்தி அடைந்ததாக போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர். இதற்கு என்ன செய்யலாம் என்பதை தாங்கள் சந்தித்து முடிவு செய்ய இருப்பதாக கூறினர்.
10 லட்சம் மக்கள் போராட்டத்தில் இறங்கியபோது அவர் இந்த மசோதாவை நிறுத்தி வைத்தார், 20 லட்சம் மக்கள் போராட்டம் செய்தபோது அவர் மன்னிப்பு கேட்டார். இன்னும் எத்தனை பேரை அவர் எதிர் பார்க்கிறார் என நேற்று சிறையில் இருந்து விடுதலை அடைந்த ஜனநாயகத்துக்கு ஆதரவான ஜோஷூவா வாங் கேள்வி எழுப்பினார்.
இந்த மன்னிப்பு அவருடைய பொறுப்பற்றத்தன்மை என கூறிய அபி என்ற 20 வயது போராட்டக்காரர் “அவர் இப்போதும் பதவி விலக வேண்டும் என நான் நினைக்கிறன். அவர் இரண்டாவது வாய்ப்பு கேட்டால் அதற்கேற்றது போல இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் .அவர் மேல் நம்பிக்கை இல்லை” என கூறினார்.
இந்த போராட்டத்தில் சீனா லேமிற்கும் இந்த மசோதாவுக்கும் ஆதரவு அளித்து வருகிறது. -BBC_Tamil