ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியது என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அது இரானிய எல்லைக்குள் குமோபாரக் அருகில் பறந்ததால் சுட்டு வீழ்த்தியதாக இரானிய பாதுகாவலர்கள் கூறுகின்றனர்.
இந்த நிகழ்வு அமெரிக்காவுக்கு ஒரு தெளிவான விவரத்தை சொல்லும் என நம்புகிறேன் என்று ஐஆர்ஜிசி கமாண்டர் மஜ் -ஜென் ஹுசைன் சலாமி கூறியதாக இரான் நாட்டு பத்திரிகை கூறுகிறது.
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் நடுவில் தற்போது இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.
திங்கள்கிழமையன்று கூடுதலாக ஆயிரம் படைவீரர்களை இரானிய படைகளுக்கு எதிராக அந்த பகுதியில் நிறுத்திவைப்பதாக அமெரிக்க பாதுகாப்பு துறை கூறியிருந்தது.
- ஈரான் அணுசக்தித் திட்டம் தொடர்பான ஒப்பந்தம் எட்டப்பட்டது
- டேங்கர்-போர்க்கப்பல் மோதல்: அமெரிக்க கடற்படை பிரிவின் கமாண்டர் நீக்கம்
கடந்த வியாழக்கிழமையன்று அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தங்களுடைய எல்லை பகுதியில் வந்ததால்தான் சுட்டு வீழ்த்தினோம் என இரானிய ராணுவம் கூறியதாக இரானிய பத்திரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இரானிய உயர் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் புதனன்று இரான் எந்தவித எல்லைமீறலையும் பொறுக்காது என் எச்சரித்தார்.
எங்களுடைய வான்வெளி எல்லை தான் எச்சரிக்கை கோடு ,அதை மீறினால் இரான் அதற்கு பதிலடி கொடுக்கும் என டாஸ்னிம் செய்தி நிறுவனத்திடம் கூறியிருக்கிறார் அலி ஷம்கஹ்னி.
கடந்த வாரம் எம் க்யூ -9 என்ற ஆளில்லா விமானத்தை டேங்கர்கள் மீது உள்ள கவனத்தை திருப்ப சுட்டு வீழ்த்த முயற்சி செய்ததாக அமெரிக்கா இரான் மீது குற்றம் சாட்டியது.
அதற்கு முன்பே அந்த ஆளில்லா விமானம் கப்பலில் தீ பற்றியதை கவனித்து விட்டது என கூறினார் கடற்படை அதிகாரி.
- இரான் அணு ஒப்பந்தம்: செறிவூட்டப்பட்ட யுரேனியம் குறித்து அதிபர் ரூஹானி முக்கிய அறிவிப்பு
- இரான் நாட்டு உலோக ஏற்றுமதி மீது அமெரிக்கா தடை – பின்னணி என்ன?
கடந்த வாரம் வேறு ஒரு எம் க்யூ -9 என்ற ஆளில்லா விமானத்தை ஹூதி கிளர்ச்சி குழு சுட்டு வீழ்த்தியது.
ஹூதி குழுவின் சக்திக்கு மேலானது இந்த தாக்குதல். இதற்கு இரானே பயிற்சி அளித்திருக்க வேண்டும் என்று எங்களுக்கு தோன்றுகிறது என அமெரிக்க ராணுவம் கூறியிருந்தது. ஆனால் இரான் இதனை மறுத்தது. -BBC_Tamil