அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது அப்பட்டமான பொய் !

ஒமன் நாட்டுக்கு அருகே வைத்து, அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது என்பது ஒரு அப்பட்டமான பொய் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த ஆளில்லா விமானம், 43மில்லியன் டாலர் பெறுமதியானது. இதனை 180 மில்லியன் டாலர் பெறுமதியானது என்று குறிப்பிடுவதே முதலில் தவறான செய்தியாகும். இதுபோக குறித்த விமானத்தை நோக்கி தரையில் இருந்து வானில் உள்ள விமானங்களை தாக்கும் ஏவுகணையை ஈரான் ராணுவம் ஏவியுள்ளது.

ஆனால் அமெரிக்க விமானத்தில் உள்ள, பாதுகாப்பு கருவிகள் உடனே இயங்கி பொய்யான வெப்ப பாதை ஒன்றை உருவாக்கி ஏவுகணையை திசைமாறச் செய்துவிட்டது. அமெரிக்க ஆளில்லா விமானத்தை தாம் சுட்டு விழ்த்தியதாக ஈரான் வெளியிட்ட புகைப்படம் போட்டோ ஷாப்பில் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அமெரிக்கா. சுட்டு வீழ்த்தப்பட்டதாக சொல்லப்பட்ட விமானத்தை இன்று காட்டியுள்ளது.

அது அமெரிக்க தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கிய காட்சிகளையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

தற்போது ஈரான் வெளியிட்டுள்ள வீடியோ மேலும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது.தனது விமான எதிர்ப்பு பீரங்கிகள் உள்ள நிலையிலிருந்து ஏவுகணை புறப்பட்டுச் செல்வதும் அது அமெரிக்க ஆளில்லா விமானத்தை தாக்கி அழிப்பதும் போன்றதொரு வீடியோவை ஈரான் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.இதேவேளை தனது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது என்று கூறிவரும் அமெரிக்கா.

ஈரான் மீது ராணுவ தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க விமானம் விழவில்லை என்றால் அமெரிக்கா ஏன் இவ்வளவு கடுப்பாக இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது அல்லவா ?

-athirvu.in