எங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் அமெரிக்காவின் உடைமைகள் தீக்கிரையாகும் – ஈரான் எச்சரிக்கை!

எங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் தீக்கிரையாகும் என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.

எங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் தீக்கிரையாகும் என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது.

ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று பதிலடி கொடுத்து வருகிறது. சமீபத்தில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு ஈரானும், அமெரிக்காவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினர். இதற்கிடையே ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பிராந்தியத்திற்குள் வந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, உளவு விமானம் சர்வதேச எல்லையில்தான் பறந்தது. அதை வேண்டுமேன்றே ஈரான் அரசு சுட்டு விழ்த்தியதாக குற்றம்சாட்டியது.

இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானை எச்சரிக்கும் விதமாக தனது டுவிட்டரில் “ஈரான் மிகப் பெரிய தவறு செய்து விட்டது” என பதிவிட்டிருந்தார்.

மேலும், ஈரான் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தாக்குதல் நடத்த உத்தரவிட்டு அதனை கடைசி நிமிடத்தில் கைவிட்டதாக வெளிவந்த செய்தி இரு நாடுகளிடையே போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், எங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் தீக்கிரையாகும் என ஈரான் நாட்டின் ராணுவ தளபதியின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் அபோல்பஸல் ஷேகர்ச்சி எச்சரித்துள்ளார்.

-athirvu.in