‘பொய்யான பாலியல்’ குற்றச்சாட்டுக்காக பதவி விலகுவது நமது வழக்கமல்ல -மகாதிர்

பாலியல் காணொளியுடன் இணைத்துப் பேசப்படும் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலிக்குத் தம் ஆதரவு என்றும் உண்டு என்பதைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் மீண்டும் காட்டிக் கொண்டிருக்கிறார்.

அஸ்மின் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என்று கூறிய மகாதிர் பொய்யான அவதூறுக்காக பதவி விலகுவது மலேசியாவின் வழியல்ல என்றார்.

“மற்ற நாட்டு மக்கள் அப்படிச் செய்கிறார்கள் என்பதற்காக அவரும் அதைச் செய்ய வேண்டியதில்லை.

“ஒரு நாட்டில் விமானம் விமான நிலையத்தில் விழுந்து நொறுங்கியது என்பதற்காக அதன் போக்குவரத்து அமைச்சர் பதவி விலகுகிறார் அல்லது ஓடும் இரயிலிலிருந்து வெளியில் குதிக்கிறார்

“ஆனால், அது நம் வழியல்ல”, என்றாரவர்.