ஐ. அமெரிக்க எல்லையில் கடும் வெப்பத்தால் ஏழு அகதிகள் இறப்பு அறிக்கையிடப்பட்டுள்ளன

கைக்குழந்தையொன்று, குழந்தைகள் இரண்டு, பெண்ணொருவர் உள்ளடங்கலாக ஏழு அகதிகள் இறந்ததாக ஐக்கிய அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், ஐக்கிய அமெரிக்க – மெக்ஸிக்க எல்லையில் மத்திய அமெரிக்க குடும்பங்கள் செல்வது அதிகரிக்கையில் மேற்குறித்த தகவலானது கடும் வெப்பத்தின் ஆபத்தை வெளிக்காட்டுகின்றது.

தென் டெக்ஸாஸிலுள்ள றியோ கிரான்டேயில் ஐக்கிய அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கும் வரை மூன்று சிறுவர்களும், பெண்ணொருவரும் சில நாட்களாக இறந்திருந்ததாக தனது பெயரை வெளிக்காட்ட விரும்பாத உள்ளூர் சட்ட அமுலாக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இவர்கள் மக்கலெனுக்கு 29 கிலோ மீற்றர் கிழக்காக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், வெப்பத்தாலும் நீரிழப்பாலும் உயிரிழந்தாகக் கருதப்படுகிறது.

இதேவேளை, கடந்த புதன்கிழமையும், வியாழக்கிழமையும் பெறப்பட்ட அநாமதேய அழைப்புகளைத் தொடர்ந்து, டெல் றியோவிலுள்ள ஐக்கிய அமெரிக்க எல்லைக் கண்காணிப்பு முகவர்கள், இரண்டு ஆண்களின் சடலங்களை மீட்டதாக ஐக்கிய அமெரிக்க எல்லைக் கண்காணிப்பு முகவரகம் கூறியுள்ளது.

இந்நிலையில், உருக்குலைந்த இன்னொரு சடலமொன்று நோர்மாண்டிக்கு அருகேப் கடந்த வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

-tamilmirror.lk