இந்தியாவில் மட்டுமல்ல ஐரோப்பாவிலும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம்

இந்தியாவில் மட்டுமல்ல ஜெர்மனி, போலாந்து, செக் குடியரசு ஆகிய நாடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு புதன்கிழமை வெப்பம் பதிவாகி உள்ளது. வரும் நாட்களில் இன்னும் வெப்பம் உயரலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாடுகளில் மட்டுமல்லாமல் பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் வியாழக்கிழமை 40 டிகிரிக்கும் மேல் வெப்பம் இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. வட ஆப்பிரிக்காவில் அடித்த வெப்பமான காற்றே ஐரோப்பியாவில் வீசிய அனல் காற்றுக்கு காரணமென கூறப்படுகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல ஐரோப்பாவிலும் அளவுக்கு அதிகமான வெப்பம் - என்ன காரணம்?

ஒரே ஒரு சம்பவத்தை வைத்து புவி வெப்பமயமாதல்தான் காரணமென கூற முடியாது என்றாலும், இயற்கையாகவே அனல்காற்று வீசலாம் என்றாலும், தொடர்ச்சியாக வெப்பம் அதிகரிப்பது, அனல்காற்று வீசுவது இதற்கெல்லாம் பருவநிலை மாற்றம்தான் காரணம். 19ஆம் நூற்றாண்டின் பிந்தைய ஆண்டுகளின் தரவுகளை ஆராய்ந்தால், தொழில்மயமாக்கலுக்கு பின் பூமியின் மேற்புற வெப்பம் ஒரு டிகிரி அளவுக்கு உயர்ந்துள்ளது. -BBC_Tamil