சற்று முன் லண்டனில் ஏர் இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தச் சென்ற டைபூண் போர் விமானம்…

லண்டன் வான் பரப்பில் பறந்த ஏர் இந்திய விமானத்தை, உடனடியாக தரை இறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஏர் இந்திய விமானம் தொடந்தும் பறப்பில் ஈடுபடவே அதனை உடனே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, பிரித்தானிய டைபூ ரக போர் விமானங்கள் புறப்பட்டுச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது.

சுமார் 400 பயணிகளோடு அமெரிக்கா நோக்கி பறந்துகொண்டு இருந்த ஏர் இந்திய விமானத்தில் குண்டு இருப்பதாக தகவல் வெளியாகியது. உடனே விமானத்தை ஸ்டான்ஸ்டெட் விமன நிலையத்தில் தரையிறக்குமாறு கட்டளை இட்டார்கள்.ஆனால் விமானி கேட்டபாடாக இல்லை. இதனை அடுத்தே விமானத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வருவது. இல்லையென்றால் சுட்டு வீழ்த்துவது என்ற நிலைக்கு பிரித்தானிய பாதுகாப்பு படையினர் தள்ளப்பட்டார்கள் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் போர் விமானங்கள் ஏர் இந்திய விமானத்தை நெருங்கிய வேளை. அது பாதுகாப்பாக ஸ்டான்ஸ்டெட் விமானநிலையத்தில் தரையிறங்கியது.

Source: Armed police ‘quarantine’ up to 400 Air India passengers after ‘bomb threat’ forces RAF Typhoons to bring US-bound jet into land at Stansted Airport

-athirvu.in