புகைப்பழக்கம்: கடந்த 39 ஆண்டுகளில் கடற்கரைகளிலிருந்து எடுக்கப்பட்ட சிகரெட் பஞ்சுகள்

அமெரிக்கா ப்ளோரிடா கடற்கரையில், ப்ளாக் ஸ்கிம்மர் பறவை தனது குஞ்சுக்கு சிகரெட் பட்ஸ் ஊட்டும் புகைப்படம் உலகளவில் வைரலாகி வருகிறது. காட்டுயிர் புகைப்பட கலைஞர் கரென் மேசன் எடுத்த புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர், “நீங்கள் புகைக்கிறீர்கள் என்றால், பட்ஸை கீழேபோட்டுவிட்டு செல்லாதீர்கள்” என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

கடந்த 40 ஆண்டுகளில் கடற்கரைகளிலிருந்து எடுக்கப்பட்ட சிகரெட் பஞ்சுகள் எவ்வளவு தெரியுமா?

கடந்த 39 ஆண்டுகளில் கடற்கரைகளிலிருந்து மட்டும் 60 மில்லியன் சிகரெட் பட்ஸ்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது ஓர் ஆய்வு. சிகரெட் பஞ்சுகளை உணவென்று தவறாக பறவைகள் எண்ணி தனது குஞ்சுகளுக்கு அளிக்கின்றன. -BBC_Tamil