போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை வாங்க மறுத்த சவுதி விமான சேவை

சவுதி அரேபியாவின் விலைகுறைந்த விமான சேவை நிறுவனமான ஃப்ளையடீல், 30 போயிங் 737 ரக விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

இந்த முடிவு போயிங் 737 ரக விமானங்களுக்கு ஏற்பட்ட விபத்துகளால் எடுக்கப்பட்டுள்ளது. இந்தோனீசியாவில் கடந்த அக்டோபர் மாதமும், எத்தியோப்பியாவில் கடந்த மார்ச் மாதமும் விபத்துக்கள் ஏற்பட்டன. எத்தியோப்பியாவில் நடைபெற்ற விபத்தில் 346 பேர் உயிரிழந்தனர்.

அந்த விபத்திலிருந்து 737 ரக விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் தவறுகளை சரி செய்து வருவதாக போயிங் நிறுவனம் தெரிவித்தது.

தற்போதைய தேவைகளை கருத்தில் கொண்டு 737 ரக விமானங்களை வாங்கப்போவதில்லை என ஃப்ளையடீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

737 ரக விமான்ங்களுக்கு பதிலாக ஏர்பஸ் A320 ஃப்ளீட் ரக விமானங்களை சவுதி அரேபிய அரசு விமான சேவையின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஃப்ளையடீல் பயன்படுத்தும்.

லயன் ஏரின் அதே போன்றதொரு விமானம் ஜகார்டாவில் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விபத்துக்குள்ளானது.

அடுத்த ஐந்தே மாதத்தில் எத்தியோப்பிய விமான சேவையின் ET302 விமான விபத்து நடைபெற்றது.

அது ஐந்து மாதத்திற்குள்ளாக நடைபெற்ற இரண்டாவது விபத்தாகும்.

மென்பொருளை மேம்படுத்தும் நடவடிக்கையில் போயிங் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

போயிங் 737 ரக விமானங்கள் மீண்டும் எப்போது பறக்க அனுமதிக்கப்படும் என்பது தெரியவில்லை.

இந்த இரண்டு விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 100மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக போயிங் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்த்து.

ஆனால் இதனை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். -BBC_Tamil