புதிய பாலியல் புரட்சிக்கு நாம் தயாராகிறோமா?

பாலுறவு இல்லாமல் பிள்ளை பெறுதல், வரம்பற்ற பாலியல் தொடர்புகள் என பாலியல் தொடர்பான நம்முடைய போக்குகள் வெகு சீக்கிரத்தில் வேகமான மாறுதல்களை சந்திக்கும் என்று கணிக்கிறார் எழுத்தாளர் பிரான்டன் அம்ப்ரோசினோ.

நாம் ஏன் பாலியல் உறவு கொள்கிறோம்?

இந்தக் கேள்விக்கான நமது பதில்கள் பெரும்பாலும் குழந்தை பெறுவதே நோக்கம் என்பதாக குறிப்பிடும். குழந்தை உருவாவதற்கான முதன்மையான வழிமுறையாக பாலியல் தொடர்பு இருக்கிறது.

ஆனால் இனப்பெருக்கத்தில் பாலுறவுக்கு ஏறத்தாழ எந்தத் தொடர்பும் இல்லை என்ற நிலை வருமானால், பாலியல் உறவு பற்றி நாம் என்ன நினைப்போம்?

1978ல் உலகின் முதலாவது “சோதனைக் குழாய் குழந்தை” பிறந்ததில் இருந்து இந்த முறையில் 80 லட்சம் பேர் பிறந்திருக்கின்றனர். கருமுட்டையில் மரபணு தொடர்பான பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கான வசதிகள் அதி நவீனமயமாகி வரும் சூழ்நிலையில், இந்த எண்ணிக்கை வருங்காலத்தில் பெருமளவு அதிகரிக்கலாம்.

“என்னுடைய திடமான கணிப்பு என்னவென்றால் எதிர்காலத்தில் மக்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வார்கள் – ஆனால் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக அது இருக்காது” என்று The End of Sex And The Future of Human Reproduction புத்தகத்தின் ஆசிரியர் ஹென்றி டி. கிரீலி தொலைபேசி மூலம் என்னிடம் கூறினார்.

இன்னும் 20 முதல் 40 ஆண்டுகளில் உலகெங்கும் பெரும்பாலான மக்கள், மருத்துவ வசதி மிக்கவர்கள், சோதனைச்சாலையில் கருத்தரித்துக் கொள்வதை விரும்புவார்கள்'' என்று அவர் குறிப்பிட்டார்.
<figure class="media-landscape no-caption full-width"><span class="image-and-copyright-container"><img class="responsive-image__img js-image-replace" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/C005/production/_107775194__102834104_pregnantwomen.jpg" alt="பெண்" width="624" height="351" data-highest-encountered-width="624" /><span class="off-screen">படத்தின் காப்புரிமை</span><span class="story-image-copyright">GETTY IMAGES</span></span></figure>
கருத்தரித்தலுக்கு முந்தைய மரபியல் பரிசோதனைகள் (PGD) எதிர்கொள்ளும் சட்டபூர்வ மற்றும் நெறிசார்ந்த சவால்கள் சிலவற்றை கிரீலியின் புத்தகம் ஆய்வு செய்திருக்கிறது.
பெரும்பாலான மற்ற விஷயங்களைப் போல, ஓரளவுக்கு உள்ளுறுப்புகளில் எதிர்மறையான தாக்கம் ஆரம்பத்தில் இருக்கலாம். ஆனால் பி.ஜி.டி. மூலமாகப் பிறக்கும் குழந்தைகள், காலப்போக்கில் இரண்டு தலை, வால் கொண்டவையாக இருக்காது என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது” மக்கள் இதை சகித்துக் கொள்வது மட்டுமின்றி, பாலியல் உறவு இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்பவும் செய்வார்கள் என்று புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

அந்த உலகில் – சோதனைச்சாலைகளில் உருவாக்கப்பட்ட குழந்தைகளின் உலகில், பாலியல் உறவு மூலம் கருத்தரித்தலை சிறிய எண்ணிக்கையிலான பெண்கள் மட்டுமே விரும்புவார்கள்; குழந்தை பெற்றுக் கொள்வதில் பாலியல் உறவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்ற நிலை உருவானால் – பாலியல் உறவு என்பதன் அர்த்தம் என்னவாக இருக்கும்?

பாலுறவு எதற்காக?”

இதே தலைப்பில் எழுதப்பட்ட ஆர்வத்தைத் தூண்டும் கட்டுரையில் இந்தக் கேள்வியை டேவிட் ஹால்பெரின் கேட்டிருக்கிறார். பாலுறவு என்பது, எப்போதும் எதற்காக என்ற கேள்வியுடன் இணைந்ததாக இருக்க வேண்டும். அந்தக் காரணம் கெட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மனிதர்களாக இருப்பது என்பது அறிவுபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் ஆர்வம் கொண்டதாக இருக்கவேண்டும் என்ற பொருள் கொண்டது. பாலுறவை அனுபவிப்பது, என்னவாக இருக்கும் என்று விளக்க முற்படுவது ஆகியவை அதிக அளவில் விமர்சனங்களில் நமது பெரும்பாலான நேரத்தை செலவிடும் விலங்குகளுக்கு – மனிதர்களுக்கு – மிக இயல்பானது.

உயிரியல் ரீதியாக, மனிதர்கள் ஏன் பாலியல் உறவு வைத்துக் கொள்கிறார்கள் என்பதற்கு ஒரு காரணம் கண்கூடாகத் தெரிகிறது. உயிரியல் முனைப்புகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக நாம் பாலியல் உறவு வைத்துக் கொள்கிறோம். குழந்தை பெற்றுக் கொள்வது மற்றும் பிணைப்பு ஏற்படுத்திக் கொள்வது ஆகியவை இதில் அடங்கும். உண்மையில் மேற்கத்திய கலாச்சாரத்தில் நமக்கு இரண்டு காரணங்கள் தெரிவிக்கப் பட்டிருக்கின்றன. இரண்டுமே இறுதி இலக்கு என்பதை சுற்றிவருகின்றன.

நான் முந்தைய கட்டுரை ஒன்றை எழுதியபோது, ஞானிகள் பாலியல் உறவில் ஈடுபட்டதை நியாயப்படும் போது, குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்காக பாலியல் உறவு என்ற மகிழ்ச்சியில் ஈடுபடுவதில் தவறில்லை என்ற அர்த்தத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். இந்த நெறிமுறை கிறிஸ்தவ பாரம்பரியத்திலும் பரவியது. அகஸ்டின் தொடங்கி, மேற்கத்திய நாடுகளில் பரவலான தாக்கத்தை இது ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வரையறையின்படி, குழந்தை பெற்றுக் கொள்வது தான் முதன்மையான காரணம் என்பது வரையில், பாலியல் உறவு என்பது நெறிசார்ந்த விஷயமாகக் கருதப்படுகிறது. (விளக்கம் சொல்ல வேண்டுமானால், இது கிறிஸ்தவ நெறியாகக் கூறப்பட்டாலும், இதன் ஆரம்பம் வேறு எங்கோ இருக்கின்றன. உண்மையில் சாங் ஆஃப் சாலமன் (song of solomon) என்ற விவிலியம் தொடர்புடைய புத்தகம், இரு காதலர்களுக்கு இடையே அளவுகடந்த, உணர்ச்சிகரமான, பாலுணர்வுடன் கூடிய பாலுறவு உறவு பற்றி பெரிதாகப் பேசப் பட்டிருக்கிறது. கிறிஸ்தவ உரையாசிரியர்கள் பாடலை தவறாக விளக்கியதைப் போல கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலானது அல்ல.)

புதிய பாலியல் புரட்சிக்கு நாம் தயாராக இருக்கிறோமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பாலுறவுகள் எதற்காக என்பதற்கான மற்றொரு காரணம் அரிஸ்டாட்டில் மூலமாக சொல்லப் பட்டிருக்கிறது என்று ஹால்பெரின் சுட்டிக்காட்டுகிறார். கி.மு. நான்காம் நூற்றாண்டினை சேர்ந்த முந்தைய பகுப்பாய்வில், கிரேக்க தத்துவஞானி பின்வரும் காரணத்தைக் கூறுகிறார்:

“உணர்ச்சிபூர்வமான விருப்பம் என்ற இயற்கையின்படி, நேசம் காட்டுவது பாலியல் உறவுக்கு உகந்ததாகக் கருதப் படுகிறது. அப்படியானால், உணர்ச்சிபூர்வமான விருப்பம் என்பது, பாலியல் உறவு என்பதைவிட, விருப்பத்தை அதிகமாகக் குறிப்பிடுகிறது. பெரும்பாலும் அப்படித்தான் என்றால், அதுதான் இறுதியானதாகவும் இருக்கும். அப்படியானால், பாலியல் உறவு என்பது இறுதியானதே கிடையாது அல்லது நேசம் காட்டுவதற்கு மட்டுமானது” என்று கூறியுள்ளார்.

“நேசம் என்பது உணர்ச்சிபூர்வ விருப்பத்தை நோக்கமாகக் கொண்டது. பாலியல் உறவை இலக்காகக் கொண்ட நேசம் அல்ல. நேசத்தை நோக்கமாகக் கொண்ட பாலியல் உறவு” என்று அரிஸ்டாட்டில் கூறுவதாக ஹால்பெரின் விளக்குகிறார். அரிஸ்டாட்டில் கூறியபடி, பாலியல் உறவுக்கான உண்மையான காரணம், நாம் நேசிக்க வேண்டும், நேசிக்கப்பட வேண்டும் என்பது தானே தவிர, உறவு கொள்ள வேண்டும் என்பது இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாலியல் உறவு என்பது சாதாரணமானது அல்ல, அதற்கும் மேலானது, அதைவிட உயர்வானது, அதைவிட மதிப்பு மிக்கது.

மற்ற பலரைப் போல, பாலியல் உறவும், நேசமும் இணைந்து இருக்கும் விஷயம் என்று அரிஸ்டாட்டில் இயல்பாக எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த அனுமானத்தின் வலு என்னவென்று நிரூபிக்க அவர் ஒருபோதும் முயற்சிக்கவில்லை. இருந்தபோதிலும், “பாலியல் உறவு .

என்பது உணர்ச்சிபூர்வ விருப்பத்தின் இறுதி நிலை கிடையாது” என்று அவர் கூறியுள்ளார் என்று ஹால்பெரின் குறிப்பிடுகிறார். அப்படி இருக்குமானால், பாலியல் உறவுக்கும் நேசத்துக்குமான தொடர்பு பற்றி இல்லாமல் பாலியல் உறவுக்கும் உணர்ச்சிபூர்வமான விருப்பத்துக்கும் இடையில் உள்ள தொடர்பு என்னவாக இருக்கும் என்பது தான் மிகவும் ஆர்வத்தை எழுப்பும் கேள்வியாக இருக்கும் என்று ஹால்பெரின் கருதுகிறார். அரிஸ்டாட்டில் சொல்வது சரியாக இருக்கும் என்றால், பாலுறவில் உணர்ச்சிபூர்வ தேவைக்கு இடம் கிடையாது – அதன் உண்மையான நோக்கம் வேறு எதிலோ இருக்கிறது என அர்த்தமாகிறது. சுருக்கமாகச் சொன்னால், பாலியல் உறவு என்பது உண்மையில் பாலியல் பற்றியதாக இல்லை.

அப்படியானால் எதற்காக பாலியல் உறவு கொள்கிறோம்? நிச்சயமாக, குழந்தை பெற்றுக் கொள்வதற்காக. பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள – நல்லது. ஆனால் அவை இரண்டு மட்டுமே இதற்குப் பதிலாக இருக்க முடியாது. பல கலாச்சார செயல்பாடுகளைப் போல, பாலியல் உறவும், ஏன் என்ற கேள்விக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. உணவைப் பற்றி சிந்தியுங்கள். உயிர்வாழ்வதற்குத் தேவை என்ற கருத்தில் இருந்து, நாம் அதை சாப்பிடுகிறோம், அனைவரும் ஒன்றாக சாப்பிடுகிறோம் – நமது முன்னோர்கள் தங்களுடைய ஆதார வளங்களை ஒன்றாக குவித்து வைத்திருந்திருக்கிறார்கள் (நமது குழுவிற்கு அதிகம் என்றால் எனக்கும் அதிகம் என்ற வகையில்).

ஆனால் அந்த விஷயங்களில் இருந்து, இப்போதுள்ள சமைத்து உண்ணும் கலாச்சாரத்துக்கு மாறியபிறகு -தங்க இழைகள் வைக்கப்பட்ட பர்கர்கள், இன்ஸ்டாகிராம் உணவு கணக்குகள், சமையல் நெட்வொர்க், சகாக்களுடன் மகிழ்ச்சியான நேரங்கள், தேவாலயத்துக்குச் சென்ற பிறகு விருந்தினருடன் டின்னர் சாப்பிடுதல் – என மாறிய பிறகு – உணவுடன் நமக்குள்ள தொடர்பின் சரியான தேவை குறித்து மதிப்பிட்டுக் கூறுவது கடினமானதாகிவிட்டது. நாம் பயனற்ற விஷயங்களில் அடிக்கடி மகிழ்ச்சி கொள்கிறோம் என்பது தான்.

நமக்கும், மானிடர் அல்லாத விலங்குகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசமாக இருக்கிறது. அது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிற காரணத்தால், அதை நாம் அனுபவிக்கிற காரணத்தால், அதைச் செய்கிறோம் – காரணம் என்ன என்ற மற்ற கேள்விகளில் இருந்து மாறுபட்டதாக இது இருக்கிறது. “காரணம் எதுவும் இல்லை என்ற நிலையில் நடைபெறுவது தான் பாலியல் உறவு செயல்பாடு” என்பதாக இருக்கும் என்று ஹால்பெரின் எழுதியிருக்கிறார்.

அநேகமாக இன்பத்தை அனுபவிப்பது என்பது தான் நம்மில் பலருக்கு பிரதான காரணமாக இருக்கும் – நம்மில் மிகவும் மரியாதைக்குரியவராக இருந்தாலும் – பாலியல் உறவு என்பது இதைக் குறிக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது.

சரியாகச் சொன்னால், பாலியல் உறவு கொள்வது என்பது வழக்கமாக ஒரு காரியம், இல்லாவிட்டால் நாம் வேறு ஏதாவது செய்து கொண்டிருப்போம். ஆனால் கடந்த சில தசாப்தங்களாக, குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே பாலியல் உறவு கொள்வது என்ற சிந்தனைகளை கேள்விக்குள்ளாகத் தொடங்கிவிட்டதைக் காண முடிகிறது.

இந்த விஷயத்தில் மாத்திரை வடிவிலான கருத்தடை சாதனம் என்பது புரட்சிகரமான விஷயமாக உள்ளது. சிலருக்கு அதிகமான அச்சத்தைத் தருவதாக இது இருக்கிறது. 1968ல் ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் பியர்ல் பக் எழுதிய கட்டுரையில், மாத்திரை வடிவிலான கருத்தடை சாதனம் என்பது என்ன என்று எல்லோருக்கும் தெரியும். அது ஒரு சிறிய பொருள் - ஆனாலும் நமது சமூகத்தில் அதன் தாக்கம் அணுகுண்டைவிட பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும்'' என்று கூறப்பட்டுள்ளது. பல அடிப்படைவாத சிந்தனைகளைப் போலவே, பக்கின் வாதம், காரணம் இல்லாமல் ஏற்படும் பாலியல் உறவு நாகரிகத்தின் இறுதி நிலையைக் குறிப்பதாக இருக்கும் என்ற கருத்தாளர்களால் உருவானதாக இருக்கலாம். இவர்களைப் பொருத்த வரை, பாலியல் உறவு நடைமுறைகள் குறித்த நவீன கால தாராள கருத்துகளுக்கு, பாலியல் உறவு புரட்சி என்று குறை கூறுவது தான் காரணமாக இருக்கும்.
<figure class="media-landscape no-caption full-width"><span class="image-and-copyright-container"><img class="responsive-image__img js-image-replace" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/7631/production/_107775203_rose.jpg" alt="புதிய பாலியல் புரட்சிக்கு நாம் தயாராக இருக்கிறோமா?" width="976" height="549" data-highest-encountered-width="624" /><span class="off-screen">படத்தின் காப்புரிமை</span><span class="story-image-copyright">GETTY IMAGES</span></span></figure>
பாலியல் உறவு புரட்சி என்பது, 1960களில் தொடங்கிய, பாலியல் உறவுகள் குறித்த பொது மக்களின் எண்ணங்களில் ஏற்பட்டுள்ள பெருமளவு மாற்றங்கள் மற்றும் முக்கியமான கலந்துரையாடல்களில் பங்களிப்பு செய்வதைக் காட்டிலும், அச்சுறுத்தலான அரக்கன் என்ற வகையில் கையாளப்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கவனித்துள்ளனர். சான் டியாகோ மாகாண பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியரான ஜீன் எம் டிவெங்கே 2015ல் வெளியிட்ட ஆய்வறிக்கையில், 1970களில் இருந்து 2010கள் வரையில், பாலியல் உறவு குறித்து அமெரிக்கர்களின் எண்ணம் எப்படி மாறியிருக்கிறது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
1970களுக்கும், 2010களுக்கும் இடைப்பட்ட காலத்தில், திருமணம் சாராத பாலியல் உறவுகளை அமெரிக்கர்கள் அதிக அளவில் ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்” என்று அந்தப் பெண் பேராசிரியர் நிறைவுரையாகக் குறிப்பிட்டுள்ளார்.

மதம் சார்ந்த நெறிகள் மற்றும் தனிநபர் குணம் சார்ந்த விஷயம் என்ற முக்கியத்துவம் குறைந்து வருகிறது. பாலுணர்வு என்பது சமூக மரபுகளுக்குள் கட்டுப்படுத்திவிடக் கூடிய விஷயமல்ல என்று நிறைய அமெரிக்கர்கள் நம்புகின்றனர். சமீப கால தலைமுறையினரும் இந்த நம்பிக்கையின்படி தான் செயல்படுகின்றனர். பருவ வயதை எட்டியவர்கள் அதிக அளவில் பாலியல் உறவு வைத்துக் கொள்கிறார்கள். முன்பு 20 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்களைக் காட்டிலும், இவர்கள் போகிற போக்கில் பாலியல் உறவு ஏற்படுத்திக் கொள்பவர்களாக இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட மக்கள் பிரிவுக்குள் கூட, பல காரணங்களுக்காக (வயது, இனம், பாலினம், மத நம்பிக்கைகள் போன்றவை) எண்ணங்கள் மாறுபடலாம் என்று டிவெங்கே சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் “பாலியல் சிந்தனைகள் மற்றும் நடத்தைகளில் அர்த்தமுள்ள தலைமுறை மாற்றங்கள் காலப்போக்கில் நிகழ்ந்திருக்கின்றன” என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

எனவே, பாலியல் உறவு என்பது பற்றிய நம்முடைய கருத்து, அது அமைவிடம் மற்றும் காலத்தை சார்ந்ததாக இருக்கும் விஷயம் என்று தெரிகிறது. பாலியல் உறவுகளில் நமது நெறிமுறைகள் காலவரம்பற்றவை அல்ல: அவை மாறியுள்ளன, தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். அநேகமாக, நாம் ஆயத்தமாகும் காலத்துக்கு முன்னதாகவே வேகமாக இது நடக்கலாம்.

எது இயற்கையானது?

மனிதர்களின் மற்ற செயல்பாடுகளைப் போல, பாலியல் செயல்பாடுகளும் வேறெங்கோ இருந்துதான் வந்திருக்கின்றன. உயிரின வரிசையில் நமக்கு முந்தைய இனமான விலங்குகளிடம் இருந்து தான் நமது பாலியல் சிந்தனைகளும், செயல்பாடுகளும், நெறிமுறைகளும் வந்திருக்கும். பிரபஞ்சத்தின் ஆரம்ப கால வாழ்க்கையில் இந்தப் பயணம் தொடங்கியிருக்கிறது.

உயிரின வரிசையில் நமது இனத்தின் மீது நாம் கவனம் செலுத்தினால், பாலியல் உறவு குறித்த மரபு வழியிலான எண்ணங்கள், நாம் நினைத்திருப்பதைவிட குறைந்த இயல்பானவையாக இருந்திருக்கின்றன. அமெரிக்க மத போதகர் ஒருவர், ஓரினச் சேர்க்கையை கண்டித்துப் பேசியதை ஒருமுறை நான் கேட்டிருக்கிறேன். அவர்களுடைய மத சபையைப் பொருத்த வரை அது கேலிக்குரிய ஜோக் என்று கருதப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

“இரண்டு ஆண்கள் ஒன்று சேரக் கூடாது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட வேண்டியதில்லை. காடுகளில் திரியும் விலங்குகளுக்கும் இது தெரியும்!” என்று அவர் கூறினார். ஓரினச் சேர்க்கை என்பது இயற்கைக்கு முரணானது, அதனால் தான் விலங்குகளிடம் அந்தப் பழக்கம் இல்லை என்று அந்தப் பாதிரியார் கூறினார்.

அபூர்வமாக சிலவற்றில் அந்தப் பழக்கம் இருக்கிறது. ஜப்பானில் உள்ள சிறிய வகை குரங்குகள், பழங்களில் மொய்க்கும் பூச்சிகள், மாவு வண்டுகள், அண்டரண்டப் பறவைகள், பாட்டில் கழுத்துள்ள டால்பின்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட உயிரினங்களிடம் ஓரினச் சேர்க்கை பழக்கம் இருப்பது கவனிக்கப் பட்டிருக்கிறது என்று பிபிசிக்கு எழுதிய கட்டுரையில் மெலிசா ஹோகேன்பூம் கூறியுள்ளார்.

புதிய பாலியல் புரட்சிக்கு நாம் தயாராக இருக்கிறோமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள், விலங்குகள் ஓரினச் சேர்க்கையாளர் என அடையாளம் காணப்படுவதில்லை. ஓரினச் சேர்க்கையாளர் இல்லை என்றும் அடையாளப்படுத்துவது கிடையாது. இதுதான் மனிதர்களான நம்மை வித்தியாசப்படுத்துகிறது. ஆனால் குறைந்தபட்சம் கடந்த நூற்றாண்டில், தாங்கள் வைத்துக் கொள்ளும் பாலியல் உறவு முறைக்கு ஏற்ப தங்களை மனிதர்கள் அடையாளம் கூறிக் கொண்டார்கள்.

இருபால் உறவு என்பது ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறது: குறிப்பாக, ஓரின சேர்க்கை என்பதன் எதிரான அர்த்தத்தில் இந்த வார்த்தை உருவாக்கப் பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் என்னவென்று புரிந்து கொள்ள நீங்கள் விரும்பினால், The Invention of Heterosexuality என்ற புத்தகத்தில் ஜோநாதன் நெட் காட்ஜ் எழுப்பிய கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளத் தொடங்குவீர்கள்: “உலகை இருபால் உறவு கொள்பவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று பிரிப்பதன் மூலம் யாருடைய நலன்கள் பாதுகாக்கப் படுகின்றன?” என்ற கேள்வி எழும். ஆண் ஓரினச் சேர்க்கையாளரைப் போன்ற தோற்றம் உள்ளதற்காக ஒரு குழந்தை கேலி செய்யப்படும் போது, எனக்கு ஏற்பட்டதைப் போல நடக்கும்போது, தங்களுடைய நலன்களை மனதில் கொண்டு இந்த தனித்தன்மை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இருபால் அல்லது ஓரினச் சேர்க்கையாளர் என்ற கோடு எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்று சொல்ல முடியாது. 2019ல் வெளியான YoutGov கணக்கெடுப்பில், 10 ல் 4 பாலியல் கல்வியாளர்கள் “முழுக்க இருபாலின உறவு கொள்பவர்கள்” என்று அடையாளப்படுத்துவது இல்லை என தெரிய வந்திருக்கிறது. பாலியல் உறவின் அர்த்தம் மாறுவதைக் காட்டிலும், பாலியல் உறவைப் பார்க்கும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றி குறைவாகவே பேசப்படுவதாக இருக்கலாம்.

சுருக்கமாகச் சொல்வதானால், ஒருவருடைய பாலியல் உறவு செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அவருடைய அடையாளத்தை வரையறுப்பதற்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்பு இருந்ததைவிட, இப்போது முக்கியத்துவம் குறைந்துவிட்டது. ஓரினச் சேர்க்கையும், அந்த செயல்பாடு ஆரோக்கியமானது மற்றும் மனித பாலியல் உறவில் பல வகைகளில் ஒன்றாக இயல்பாக நடைபெறுவது என்று பெருமளவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள உலகில், பாலியல் உறவு செயல்முறைகளின் அடிப்படையில் பொதுவெளியில் அடையாளத்தை உருவாக்குவது இனிமேலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது.

எதற்காக பாலியல் உறவு என்ற கேள்வியில் இருந்து நாம் விலகிச் சென்றால், பாலியல் உறவுகள் என்றால் என்ன, தனிநபரின் அடையாளத்தில் அதற்கு என்ன பங்களிப்பு இருக்கிறது என்பது பற்றி குறைவானவர்களே சிந்திப்பார்கள்.

புதிய பாலியல் புரட்சிக்கு நாம் தயாராக இருக்கிறோமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

எதற்காக பாலியல் உறவு என்ற கேள்வி, ஆண் ஓரினச் சேர்க்கை என்ற கலாச்சாரத்தை தடுக்கும் தடைக்கல்லாக இல்லை. அவற்றில் சில சூழ்நிலைகளால் ஏற்படுபவை: உயிரியல் ரீதியாக கருத்தரித்தல் (சமீப காலம் வரையில்) திருமணம் ஆகிய சங்கடங்கள் இல்லாத நிலையில், பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே தேவைக்காக மட்டுமே ஆண் ஓரின சேர்க்கையாளர்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்கிறார்கள்.

ஆண் ஓரினச் சேர்க்கையில், அது எதற்கு என்ற கேள்வி இல்லை என்று நான் கூறவில்லை: நேசம் என்பது உள்பட அதில் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஆண் ஓரினச் சேர்க்கை கலாச்சாரம் என்பது, வரலாற்று காலத்தில் இருந்து, எந்தக் காரணமும் இல்லாமல் நடக்கக் கூடியதாகவும், எந்தத் தேவையும் இல்லாததாகவும் இருக்கிறது. பாலியல் உறவு குறித்து நீண்டகாலமாக கடைபிடிக்கப்பட்டு வரும், போற்றப்பட்டு வரும் கலாச்சார சிந்தனைகள் மற்றும் நெறிமுறைகள், ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரானவையாக இருந்தன என்று வரலாற்றுபூர்வமாக விவரிப்பதாக இது இருக்கிறது.

உறுதியளிக்கப்பட்ட, திருமணம் போன்ற உறவு மூலம் பாலியல் உறவுகள் நடைபெறுகின்றனவா என்பதைப் பொருத்து மட்டுமே அது அறம் சார்ந்ததா என்று முடிவு செய்ய வேண்டும் என்று, பல குழந்தைகளைப் போல, எனக்கும் கற்பிக்கப்பட்டது. ஆனால், இந்த வரையறை பற்றி நான் கேள்வி எழுப்பத் தொடங்கினேன். இதை எனக்கு கற்பித்த அதே ஆட்கள்தான் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதனை கடவுள் படைத்தார் என்றும் சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களுடைய உயிரியல் அறிவு அவ்வளவு மோசமானதாக பாலுறவு பற்றிய அவர்கள் கருத்தை எதற்கு கவனிக்கவேண்டும்? பாலுறவு என்பது உயிரியல் செயல்பாடு அல்லவா?

பாலியல் ரீதியாக சேருவதன் மூலம் குழந்தைகள் பெற முடியாத ஆண் ஓரின சேர்க்கையாளர்கள் பற்றிய நெறிகளை முடிவு செய்ய அவர்களுடைய போதனைகள் உதவிகரமாக இல்லை. மக்கள் தொகையில் கணிசமான அளவு பேரால் எட்ட முடியாத ஒரு தர நிலையை உருவாக்குவது மிகவும் மோசமானது, ஏமாற்றுத்தனமானது என்பது போலத் தெரிந்தது. பெரும்பாலான இருபால் பாலியல் உறவுகள் குழந்தை பிறப்பில் முடிவது கிடையாது. மேலும் குழந்தை பெற்றுக் கொள்வதற்கானதாக அல்லாத பாலியல் உறவு ஒருபோதும் இயற்கைக்கு முரணானதாகக் கண்டிக்கப்படவில்லை. குழந்தை பெற்றுக் கொள்வதற்கானதாக அல்லாத ஓரின சேர்க்கையாளர்கள் கண்டிக்கப்படும் அளவுக்கு அவர்கள் கண்டிக்கப் படுவதில்லை.

புதிய பாலியல் புரட்சிக்கு நாம் தயாராக இருக்கிறோமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நல்லவேளையாக, ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. UCLA வில் உள்ள வில்லியம்ஸ் சட்டக் கல்லூரி நடத்திய ஓர் ஆய்வில், 141 நாடுகளில் மக்கள் மனப்போக்கில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. அவற்றில் 80 நாடுகள் அல்லது 57% நாடுகளில் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு அதிகரித்து வருவது அதில் தெரிய வந்தது. 1981 முதல் 2014 வரையிலான காலக்கட்டத்தில் இந்த ஏற்பு நிலை அதிகரித்திருக்கிறது.

காலம் காலமாக ஏற்பு நிலையில் இருந்த நாடுகள் (ஐஸ்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன், டென்மார்க், அண்டோரா, நார்வே) காலப்போக்கில் அதிகம் சகித்துக் கொண்ட நிலையில், குறைவான ஏற்பு நிலை இருந்த நாடுகளில் (அஜர்பைஜான், வங்கதேசம், ஜார்ஜியா, கானா) சகிப்புத்தன்மை மேலும் குறைந்திருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான தொடர்ச்சியான போக்குகளை புறந்தள்ளிவிட முடியாது என்ற நிலையில், ஆய்வு நடத்திய பெரும்பாலான நாடுகளில், ஓரினச் சேர்க்கைக்கு சகிப்புத்தன்மை அதிகரித்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டியது முக்கியம்.

ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு பெருகுவதற்கு, ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றி ஊடகங்களில் நேர்மறையான செய்திகள் வெளியாவது உள்பட, பல காரணங்கள் உள்ளன. மக்களின் மருத்துவ மற்றும் உளவியல் அமைப்புகளின் வெளிப்படையான ஆதரவு, பலருக்கு தனிப்பட்ட முறையில் ஓரினச் சேர்க்கையாளர்களை தெரிந்திருப்பது ஆகியவையும் இதில் அடங்கும். ( பியானோ ஆசிரியராகவோ அல்லது மலர் அலங்கார நிபுணராகவோ அல்லது கத்தோலிக்க குருவாகவோ அல்லது உள்ளூர் தீயணைப்பு வீரராகவோ ஓரினச் சேர்க்கையாளர் இருந்தால், நாகரிகத்தை அழிக்க ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் விரும்புகிறார்கள் என்று நம்புவது கடினமானது.)

நான் இங்கே ஆண்கள் பற்றி கவனம் செலுத்துகிறேன். ஏனென்றால் எனக்கு அதுதான் அதிக பரிச்சயமானது. ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் எப்போதுமே அருமையாக உருவாக்கப்பட்ட பாலியல் உறவு நெறிகளுக்கு சரியான உதாரணங்களாக இல்லை. ஆண் ஓரின சேர்க்கையாளர் குழுக்கள் குறிப்பிட்ட வகை உடற்கட்டுகளை (உதாரணத்துக்கு கட்டுமஸ்தான, ஒல்லியான) பெரிதும் போற்றுகின்றன. இந்த அழகியல் தர அளவுகோல்களில் தகுதி பெற முடியாதவர்கள் (பெரும்பாலானவர்கள் தகுதி பெறுவதில்லை), இந்த தர அளவுகோல்களில் தகுதி பெறுகிறவர்களைவிட மதிப்புக் குறைந்தவர்களாக, தகுதி குறைந்தவர்களாக கருதப்படுகிறார்கள்.

Grinder என்ற app போன்ற தொழில்நுட்பம் மூலம் இப்படி தர நிர்ணயம் செய்வது சாத்தியமானது. ஆண்கள் தங்கள் உடலுறுப்புகளின் படங்களாக மட்டுமே சுருக்கிப் பார்க்கப்பட்டு, விரும்பியபடி இல்லாதவர்கள் இந்த செயலியில் வேகமாக நீக்கப்படுகிறார்கள். ஆண் ஓரினச் சேர்க்கையாளர் தொடர்புள்ள app-களில் “No fats and fems” என்று குறிப்பிடப்படுவது அதிகமாக உள்ளது. பாலியல் உறவு நெறிகள் என்று வரும்போது, நாம் இன்னும் யோசிக்க வேண்டியுள்ளது என்பது இதன் அர்த்தமாகக் கருதப்படுகிறது.

புதிய பாலியல் புரட்சிக்கு நாம் தயாராக இருக்கிறோமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆனால், இந்தக் குறைபாடுகள் இருந்தாலும், பாலியல் நெறிகள் பற்றி யோசிக்க உலகிற்குப் புதிய வழிகளை அளிக்கும் வகையில் ஆண் ஓரினச் சேர்க்கை கலாச்சாரம் இருந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொள்வது அல்லது திருமணம் அல்லது நேசம் அல்லது உறுதியளித்தல் போன்ற எதுவும் இல்லாத வழிகளாக இவை இருக்கின்றன. 2005ல் நடந்த ஒரு கணக்கெடுப்பை பரிசீலனை செய்யுங்கள். உறவில் ஈடுபட்டிருக்கும் ஓரினச் சேர்க்கையாளர்களில் 40% ஜோடியினர் வெளிப்படையாக அதை ஒப்புக்கொள்கின்றனர் என்றும், எதிரெதிர் பாலினத்தவர்கள் உறவில் உள்ள காலத்தில் 5% மட்டுமே வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்கள் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்தது. சிலர் கூறுவதைப் போல – இதுபோன்ற பாலியல் அனுபவங்கள் உண்மையில் விதிமுறைகளாக மாறும்போது – அதற்கான கதவைத் திறந்தவர்கள் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களாகத்தான் இருப்பார்கள்.

இந்த சிந்தனைகளை, இருபால் பாலியல் உறவாளர்கள் மறைக்க முற்படலாம். ஆனால் பாலியல் விஷயங்களில் எதிரெதிர் பாலினத்தவருக்கு இடையிலான உறவுகளுக்கு தார்மிக அளவில் அதிக மதிப்பு உள்ளது என்று நடிப்பது சிரமமான விஷயம். நான் முன்பு எழுதியுள்ளதைப் போல, 2019ல் நிலவும் பொதுப் பண்பாட்டில், எதிர்ப் பாலின உறவுகள் (தொடர்புகள் மற்றும் திருமணம்) முடங்கிப்போன கதைகள் பெருகியிருக்கின்றன.

“மரபு வழி” இருபாலினர் பாலியல் உறவு நெறி – வரலாற்றாளர்கள் நீண்ட காலமாகக் கூறி வருவதைப் போல, 19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது – பரிசோதித்து பார்க்கப்பட்டு, குறைபாடுகள் உள்ளதாக கண்டறியப்பட்டது.

எதிர்காலத்தில் பாலியல் உறவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்று, எதிர்காலத்தை கணிக்கும் பலரும் கடந்த காலங்களில் கூறியுள்ளனர். ஆபாசப் படங்கள் தொடங்கி, தொலைவில் இருந்து தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது (தொலைதூரத்தில் உள்ளவர்கள் கம்ப்யூட்டர் தொடர்பு மூலம், நேரில் இருப்பதைப் போன்ற தொடு உணர்ச்சிகளை தூண்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ) வரையில், எதிர்கால பாலியல் உறவு அதிகம் டிஜிட்டல் சார்ந்ததாக, செயற்கைப் பொருள் சார்ந்ததாக, குறைவான இயற்கை சார்ந்ததாக, குழப்பங்கள் குறைந்ததாக இருக்கும்.

நிச்சயமாக எதிர்காலத்தில் முக்கிய தொழில்நுட்ப மாற்றங்கள் வரும் என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், எதிர்காலத்தில் மிகப் பெரிய சவால்களாக இருப்பது, புதிய சிந்தனைகள் தொடர்பானவையாக இருக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புதிய பாலியல் புரட்சிக்கு நாம் தயாராக இருக்கிறோமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

குழந்தை பெற்றுக் கொள்வதுதொடர்பாக புதிய சிந்தனைகள் இருக்கும். 1978க்குப் பிறகு ஐ.வி.எப் (டெஸ்ட் டியூப்) மூலம் 80 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் பரவலாக அதிகரிக்கும். அந்த அளவுக்கு இந்தத் தொழில்நுட்பத்துக்கான செலவு கட்டுப்படியாகும் அளவுக்குள் இருக்கிறது. குழந்தைப் பிறப்பைக் கட்டுப்படுத்தும் கருத்தடை சாதனங்களும் நமது கலாச்சார சிந்தனையில் பாலியல் உறவையும், குழந்தை பெறுதலையும் பிரித்துவிட்டன. PGD குறித்து கிரீலியின் கணிப்புகள் சரியாக இருக்குமானால், அடுத்த நான்கு தசாப்தங்களுக்குள் ஒரு கட்டத்தில், குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள் என்பதில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். PDG என்பது எளிதான'' (கிடைக்கக் கூடிய, கட்டுப்படி ஆகக் கூடிய) முறையாக மாறிவிடும். மரபியல் மற்றும் ஸ்டெம்செல் ஆராய்ச்சிகளால் இது சாத்தியமாகலாம். தி கார்டியன் பத்திரிகையில் தனது ஆராய்ச்சியை கிரீலி கீழ்க்கண்டவாறு தொகுத்திருக்கிறார்:
<h2 class="story-body__sub-heading">எதிர்காலத்தில் குழந்தை பேறு இப்படி நடக்கக்கூடும்</h2>
ஒரு தம்பதி, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால் ஒரு கிளினிக் செல்வார்கள் – அந்த ஆண் தன்னுடைய விந்தணு சாம்பிளை கொடுத்துவிட்டுச் செல்வார்; அந்தப் பெண் தன்னுடைய தோல் சாம்பிளை கொடுத்துவிட்டுச் செல்வார். ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் கழித்து, அவர்களுடைய செல்களில் இருந்து 100 கருமுட்டைகள் உருவாக்கப்பட்டுள்ள தகவல், அந்த எதிர்கால பெற்றோருக்குத் தெரிவிக்கப்படும். கருமுட்டைகளின் மரபணு தொகுப்புகள் என்ன மாதிரியான எதிர்காலத்தை உருவாக்கும் என்ற கணிப்பும் அதில் இடம் பெறும். பிறகு அவற்றில் எந்தக் கரு முட்டையை கருப்பையில் எடுத்துக் கொண்டு, குழந்தை பெற்றுக் கொள்வது என்று அவர்கள் தேர்வு செய்வார்கள்” என்று கூறியுள்ளார்.

“விருப்பத்துக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட குழந்தைகள்” என்ற சிந்தனையை மக்கள் வெறுக்கலாம். ஆனால் குணாதிசயங்களின் அடிப்படையில், தங்கள் குழந்தைகளை பெரும்பாலான மக்கள் தேர்வு செய்யும்போது, அந்தக் குணாதிசயங்கள் அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை முழுமையாக நன்றாக அறிந்து அவ்வாறு தேர்வு செய்யும்போது,கிரீலி எழுதியுள்ள தொழில்நுட்பங்களுக்கும், பாலியல் உறவின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் நடைமுறைக்கும் இடையில் ஒரு கோடு போட்டுக் கொள்வது சிரமமான விஷயமாக இருக்கும்.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற சிந்தனை மற்றும் உத்தரவாதம் அளிக்கும் உறவு என்பதில் புதிய சிந்தனைகள் வரும். ஆயுள்காலம் குறைவாக இருந்த காலத்தில், ஒரே வாழ்க்கைத் துணைவரோடு வாழ்வது எளிதான விஷயமாக இருந்தது.

ஆனால், மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது. 1960 முதல் 2017 வரையிலான காலத்தில் மனிதர்கள் வாழும் காலம் 20 ஆண்டுகள் வரை அதிகரித்திருக்கிறது. 2040 ஆம் ஆண்டு வாக்கில், மனிதர்கள் வாழும் காலம் இன்னும் நான்கு ஆண்டுகள் அதிகரிக்கும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதுவும் குறைவான மதிப்பீடு என்று தான் கூறுகிறார்கள். உதாரணத்துக்கு, ஸ்டீவன் ஆஸ்டட் என்பவர் 150 ஆண்டுகள் வரை வாழக் கூடிய மனிதர்கள் 2001க்கு முன் பிறந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்.

ஒரு ஆணோ அல்லது பெண்ணோ 130 ஆண்டுகளுக்கு ஒரே வாழ்க்கைத் துணைவரோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த அளவுக்கு சாத்தியமானதாக இருக்கும்?

ஆனால் நாம் அவ்வளவு தொலைநோக்காகப் பார்க்க வேண்டியதில்லை. இப்போதும்கூட விவாகரத்து மற்றும் மறுமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2013ல் வெளியான Pew கணக்கெடுப்பின்படி, அமெரிக்கர்களில் 10 திருமணங்கள் நடந்தால் அதில் 4 திருமண ஜோடிகளில் யாராவது ஒருவர் மறுமணம் செய்பவராக இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. வாழும் காலம் அதிகரிக்கும் போது சாகும் வரை சேர்ந்திருப்பது'' என்பது நமது நோக்கமாக இல்லாமல் போய்விடக் கூடும்.
<figure class="media-landscape no-caption full-width"><span class="image-and-copyright-container"><img class="responsive-image__img js-image-replace" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/10E25/production/_107775196_ll.jpg" alt="புதிய பாலியல் புரட்சிக்கு நாம் தயாராக இருக்கிறோமா?" width="624" height="351" data-highest-encountered-width="624" /><span class="off-screen">படத்தின் காப்புரிமை</span><span class="story-image-copyright">GETTY IMAGES</span></span></figure>
பாலுறவின் அடையாளம் குறித்து புதிய சிந்தனைகள் வரலாம். பாலியல் உறவு என்பது பாலியல் அல்லாத வேறு எதையாவது குறிப்பிடுவதாக இருந்தால்; "மாறுபட்ட'' பாலியல் ஈர்ப்பு உள்ள காரணத்திற்காக குழந்தைகள் கேலி செய்யப்படாமல் இருந்தால்; குழந்தை பிறப்புகள் சோதனைச்சாலைகளில் நடக்குமானால்; எதிர்கால மானிடர்கள் தங்கள் விருப்பம் போல ஆண் மற்றும் பெண்களுடன் தாராளமாக உறவு வைத்துக் கொள்வார்களா? அல்லது தங்களுக்கான பாலியல் விருப்பங்களை உருவாக்கிக் கொள்வதோடு திருப்தி அடைவார்களா? பாலியல் தொடர்பு விருப்பம் மற்றும் அடையாளம் ஆகியவை இனப்பெருக்கம் என்ற பழங்கால சிந்தனைகளுடன் இணைந்தே இருக்குமா? எதிர்காலத்தில்
இருபால் பாலியல் உறவு” “ஓரினச் சேர்க்கை உறவு” என்பதெல்லாம் வரலாற்றுப் பாட வகுப்புகளில் மட்டுமே கேள்விப்படும் வார்த்தைகளாக இருக்குமா?

இதுபோன்ற சிந்தனைகள் இன்னும் அதிகமாக மைய நீரோட்டத்தில் இடம் பெறும். எல்.ஜி.பி.டி. மக்கள் பலரும், கடந்த சில தசாப்தங்களாக பாலுறவு அறம் பற்றி மறுபரிசீலனை செய்யும்படி பொதுப் பண்பாட்டை வலியுறுத்திவருவது இதற்கான முக்கியக் காரணமாக இருக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மாநாட்டில், தத்துவஞானியும் பாலின ஆய்வாளருமான ஜூடித் பட்லர் “பாலுறவு கொள்வதற்கான காரணம், அதை அனுபவிப்பதற்கு மட்டும் தான் என்பது விந்தையான உண்மை” என்று கூறியதை நான் கேட்டேன். அப்போது அதில் எனக்கு ஒப்புதல் இல்லை. ஆனால், அந்தப் பெண்மணி அப்போது கூறியதில் ஏதோ இருக்கிறது என்பதை இப்போது நான் உணர்கிறேன்.

அநேகமாக பாலுறவு என்பது எப்போதும் ஏதாவது விஷயத்துக்கானதாக இருக்கலாம் – ஆனால் யாருக்காக என்பதாக இருக்குமே தவிர, எதற்காக என்பதாக இருக்காது. அது உறவில் ஈடுபடுகிறவர்களுக்கானதாக இருக்கும். அணுக்க உணர்வுக்கும் மனிதர்களுக்கு அது தரும் துய்ப்புக்கும் அப்பால் பாலுறவுக்குப் பொருள் ஏதும் இருக்காது. உடலுணர்வின் கிளர்ச்சி, சமூகரீதியிலான நெருக்கம், பரீட்சித்துப் பார்ப்பது ஆகியவற்றின் மூலம் வருவதாகவே இந்த துய்ப்பு இருக்கும்.

எதிர்காலத்தில் பாலுறவு, அதாவது காமம், காமமாக இருக்கும். -BBC_Tamil