டிரம்பின் கருத்துக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கண்டனம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப், பெண் எம்பிக்களுக்கு எதிராக இனவெறி கருத்துக்களை பதிவிட்டதற்கு நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா அதிபர் டிரம்ப், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பிக்களிடம், அமெரிக்காவில் இருக்க விருப்பமில்லை என்றால் சொந்த நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள் என சர்ச்சைக்குரிய வகையில் டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த பதிவுக்கு சர்வதேச அளவில் கண்டனம் வலுத்து வரும் நிலையில், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஜெசிந்தா, நாடாளுமன்றம் அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் தரும் இடமாக இருக்க வேண்டும் என்றார். யாருடைய தோற்றம் பற்றியும், ஒரு பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் அவர்கள் இருப்பதற்கான உரிமை பற்றியும் ஒருபோதும் தீர்ப்பு வழங்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

-https://athirvu.in