பாலியல் காணொளி தொடர்பில் அன்வார் உதவியாளர் கைதானது மகாதிருக்குத் தெரியாது

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட பாலியல் காணொளி வெளியிடப்பட்டதன் தொடர்பில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் உதவியாளர் ஒருவர் கைதான விவரம் தமக்குத் தெரியாது என்று கூறினார

“எனக்குத் தெரியாது, இப்போதுதான் முதன்முதலாகக் கேள்விப்படுகிறேன்”, என்று மகாதிர் இன்று கோலாலும்பூரில் கூறினார்.

பாலியல் காணொளியில் இருப்பது அஸ்மின்தான் என்று கூறப்பட்டு அவர்மீதான விசாரணை முடியும்வரை அவர் விடுப்பில் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அஸ்மின் விடுப்பில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று மகாதிர் பல தடவை கூறிவிட்டார்.