சொன்ன நேரத்துக்குள் நீர் விநியோகம் சரிசெய்யப்படாவிட்டால் நடவடிக்கை- ஸ்பான் எச்சரிக்கை

சிலாங்கூரில் ஜூலை 23-இலிருந்து 26வரை ஏற்படும் நீர் விநியோகத் தடை சொன்ன நேரத்துக்குள் சரிசெய்யப்படாவிட்டால் தேசிய நீர் சேவை ஆணையம் (ஸ்பான்) பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென். நிர்வாகத்தில் மாற்றம் செய்யப் பரிந்துரைக்கும்.

இவ்விவகாரத்தைக் கடுமையாகக் கருதுவதாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாக்குறுதி அளிக்கப்பட்ட நேரத்துக்குள் நீர் விநியோகம் நிலைநிறுத்தப்பட வேண்டும் எனவும் ஸ்பான் தலைவர் சார்ல்ஸ் சந்தியாகு தெரிவித்தார்.

“ஜூலை 26 இரவு 9மணிக்குள் நீர் விநியோகம் நிலைநிறுத்தப்படாவிட்டால் ஆயர் சிலாங்கூர் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி-க்குக் கோரிக்கை வைப்போம்”, என்றாரவர்.