முன்எப்போதுமில்லாத வகையில் இவ்வாண்டு மார்ச் மாதம் 46 விழுக்காடாக சரிவு கண்டிருந்த டாக்டர் மகாதிர் முகம்மட்டின் அங்கீகார மதிப்பீட்டளவு இப்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது.
அவரது அங்கீகார மதிப்பீட்டளவு மே மாதம் 55 விழுக்காடாகவும் கடந்த மாதம் 62 விழுக்காடாகவும் உயர்ந்ததாக சுயேச்சை கணிப்பு நிறுவனமான மெர்டேகா மையம் கூறிற்று.
லங்காவி எம்பிக்கு மார்ச் மாதம்வரை சரிவு கண்டிருந்த அங்கீகார மதிப்பீட்டளவு இப்போது உயர்ந்து வருவதற்கு மலாய்க்காரர்கள் மற்றும் சீனர்களின் ஆதரவு அவருக்குப் பெருகி வருவதே காரணமாகும்.
மலாய் வாக்காளரிடையே மகாதிருக்கான ஆதரவு ஜூன் மாதத்தில் 50 விழுக்காடாக இருந்தது. ஆனால் மார்ச் மாதம் இந்த ஆதரவு 16 விழுக்காடுதான் இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டும்.
அதே காலக்கட்டத்தில் அவருக்குச் சீனர்களின் ஆதரவும் 18 விழுக்காடு உயர்ந்து 77 விழுக்காடானது.
ஆனால், இந்தியர்களிடையே மகாதிருக்கான ஆதரவு மார்ச் மாதம் 80 விழுக்காடாக இருந்து ஜூன் மாதத்தில் ஆறு விழுக்காடு குறைந்து 74 விழுக்காடானது.
பக்கத்தான் ஹரப்பானுக்கான அங்கீகார மதிப்பீட்டளவு மே மாதம் 41 விழுக்காடாக இருந்தது. ஜூனிலும் அதில் எந்த மாற்றமும் இல்லை.
இதில் இன்னொன்றும் உண்டு. 2018 பொதுத் தேர்தலிலிருந்து அதற்கான ஆதரவு இறங்குமுகமாகத்தான் இருக்கிறது.
No