மகளின் உடலிலிருந்து தீய சக்தியை அகற்றுவதாக கூறி, அவரை கொலை செய்த அமெரிக்க பெண்ணுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அர்கன்சாஸ் பகுதியை சேர்ந்த ஏஞ்சலா பஹ்கின் என்ற பெண் ஒருவர், கடந்த 2016ம் ஆண்டு வருங்கால கணவர் உன்ட்வான் ஸ்மித்துடன் கலிபோர்ணியா மாகாணத்துக்கு குடிபெயர்ந்தார்.
அங்கு வசித்து வந்த அவர், 3வயது மகள் மையாவுக்கு பேய் பிடித்திருப்பதாகவும், அவரை வெயிலில் அமர வைத்தால் தீய சக்தி அகன்றுவிடும் என நினைத்து சுமார் 10 மணிநேரம் காரில் தனியே அமர்த்தி சென்றுள்ளார்.
இதில் குழந்தை உயிரிழந்தது. இதனை வாகன சோதனையில் கண்டுபிடித்த போலீசார், குழந்தையை கொலை செய்ததாக ஏஞ்சலா மற்றும் அவரது வருங்கால கணவர் உன்ட்வான் ஸ்மித்தை கைது செய்தனர்.
அவர்களில் முதல் குற்றவாளியான ஏஞ்சலாவுக்கு 25 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய ஸ்மித்துக்கு, விரைவில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.
-athirvu.in