இங்கிலாந்து சரக்கு கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு!

ஈரானுக்கு அருகில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் தங்கள் நாட்டு சரக்கு கப்பல்களின் பாதுகாப்பிற்காக போர்க்கப்பல்கள் செல்லும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், இங்கிலாந்து கொடி தாங்கிய சரக்கு கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. மேலும் சரக்கு கப்பல்கள் தனித்தனியே அந்த நீரிணையை கடப்பதை விட்டு, கூட்டமாக இணைந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சரக்கு கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடக்கும் நேரம், கப்பல்களின் எண்ணிக்கை ஆகியவற்றை இங்கிலாந்து அரசுக்கு தெரிவிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சரக்கு கப்பல்களின் பாதுகாப்பிற்காக கடற்படை கப்பல்கள் துணை வரும் என்றும் இங்கிலாந்து பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இங்கிலாந்தின் நாட்டின் ஸ்டீனோ இம்பீரியோ என்ற எண்ணெய் கப்பலை ஈரான் சிறைபிடித்ததை அடுத்தே இங்கிலாந்து அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

-athirvu.in