சுங்கை சிலாங்கூர் டீசல் எண்ணெயால் துய்மைக்கேடானது ஒரு சதிநாச வேலை அல்ல என்கிறது போலீஸ்.
ஆற்றைத் தூய்மைப்படுத்துவதற்கு அமர்த்தப்பட்டுள்ள நிறுவனத்தின் ஊழியர்களின் கவனக்குறைவால் அது நிகழ்ந்திருக்கலாம் எனத் தொடக்கநிலை விசாரணைகள் காட்டுவதாக இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர் கூறினார்.
விசாரணைக்காக அந்நிறுவனத்தின் ஊழியர்கள் இருவர் தடுத்து வைக்கப்பட்டனர்.
“அவர்களில் ஒருவர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார். இன்னொருவர் விசாரணைக்கு உதவியாக இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
“முதலில் கீழறுப்பு வேலையாக இருக்கலாம் என்றுதான் நினைத்தோம்……..அவர்களை விசாரித்தபோதுதான் அதற்குக் கவனக்குறைவு காரணம் என்பது தெரிய வந்தது”. என்றவர் தெரிவித்தார்.