அதிருப்தியுற்ற மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து மலாக்கா மல்டிமீடியா யுனிவர்சிடி(எம்எம்யு) இப்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மாணவர் நடவடிக்கைகளுக்கான கட்டணத்தை( student activity fee, SAF) உயர்த்தாதிருக்க உடன்பட்டது.
“பரஸ்பர உடன்பாட்டின்படி நடப்பு மாணவர்களுக்கும் முதுநிலைப் பட்டதாரி மாணவர்களுக்கும் SAF கட்டணத்தை உயர்த்துவதில்லை என நிர்வாகம் ஒப்புக்கொள்கிறது.
“ மாணவர் பேராளர் மன்ற(எஸ்ஆர்சி) த்துடன் விரிவாகக் கலந்துபேசிய பின்னர் பல்கலைக்கழக நிர்வாகம் அதன் கொள்கை பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றைச் செய்யும்”, என எஸ்ஆர்சி இன்று ஓர் அறிக்கையில் கூறியது.
முன்பு SAF கட்டணம் ஆண்டுக்கு ரிம110 ஆக இருந்தது. அதை ரிம500 ஆக உயர்த்த எம்எம்யு திட்டமிட்டிருந்தது.