தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடைபெறும் நிலையில் அங்கு 6 இடங்களில் சிறிய வகை குண்டுகள் வெடித்தன.
பாங்காக்கில் நடைபெறும் மாநாட்டில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
பல்வேறு அமைச்சகங்கள் உள்ள அரசு வளாகம், பாங்காக்கின் மிக உயர்ந்த கட்டிடமான 77 தளங்களைக் கொண்ட கிங் பவர் மஹனக்கான் மத்திய பாங்காங்கின் இரு இடங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் குறைந்த திறனுடைய சிறிய வகை குண்டுகள் வெடித்தன. இதில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் காயம் அடைந்தனர்.
மாநாடு நடைபெறும் இடத்துக்கு அருகில் எந்தக் குண்டும் வெடிக்கவில்லலை என்ற போதும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அங்கு குண்டுகள் வெடித்த நிகழ்வுகள் அந்நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
-https://athirvu.in