டெக்சாஸில் துப்பாக்கிச் சூடு நடத்தியவனின் கட்டுரை!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பிடிபட்டவன ஹிஸ்பேனியர்களின் ஊடுருவல் குறித்து எழுதியதாகக் கருதப்படும் கட்டுரை வெளியாகியுள்ளது.

21 வயதான பாட்ரிக் க்ரூசியஸ் வெள்ளை மேலாதிக்க சித்தாந்தம் கொண்டவன். அவன், டெக்சாஸ்-ன் வால்மார்டில் நடத்திய துப்பாக்சிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

இதனிடையே கொல்லப்படுவதற்கு முன் பாட்ரிக் எழுதியதாகக் கருதப்படும் கட்டுரை ஒன்று அந்நாட்டு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், டெக்சாஸில் ஹிஸ்பானியர்கள் ஊடுருவல் அதிகரித்திருப்பதாகவும், ஐரோப்பாவைப் போலன்றி அமெரிக்கர்களுக்கு துப்பாக்கிப் பிரயோக உரிமையை சட்டம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் நாடு கண்முன் பற்றி எரிவதை வேடிக்கை பார்க்க முடியுமே தவிர தங்களைப் போல் ஆயுதம் எடுத்து தடுக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கலப்பினத் திருமணம், சமூக, அரசியல், பொருளாதாரக் காரணங்கள் உள்ளிட்டவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளது. தாக்குதலுக்குப் பயன்படுத்தும் ஆயுதம் ஏ.கே. 47, 100 ரவுண்டுகளுக்கு மேல் துப்பாக்கியால் சுடும்போது சூடேறும் என்பதால், வெப்பம் தாங்கி கையுறை அணியவேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாம் சுட்டுக் கொல்லப்படுவதை விட பிடிபடுவதற்கே சாத்தியக் கூறுகள் அதிகம் என்றும், எனவே தனக்கான மரண தண்டனை விதிக்கப்படும் போது தம்மை குடும்பத்தினர் தூற்றுவார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கியமாக இனங்களின் அடிப்படையில் அமெரிக்காவின் பிரதேசங்களைப் பிரிக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை உள்நாட்டுத் தீவிரவாதம் என அமெரிக்க காவல்துறை கூறியுள்ளது. அமெரிக்காவில் வெறுப்புக்கு இடமில்லை என அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

-https://athirvu.in