நேற்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பெர்சத்து கட்சியின் எம்பிகள், செனட்டர்கள், மந்திரி புசார்களின் கூட்டமொன்றை நடத்தினார்.
அக்கூட்டத்தின் படங்களை டிவிட்டரில் பகிர்ந்துகொண்ட இளைஞர், விளையாட்டு அமைச்சர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் அகூட்டம் மகாதிருக்கு முழு ஆதரவு தெரிவித்துக் கொண்டதாக பதிவிட்டிருந்தார்.
“மகாதிருக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறோம். மக்களுக்காக போராடுவதில் கவனம் செலுத்துவோம். அவர்களின் பிரச்னைகளே எங்களின் பிரச்னைகள்.
“ஆணவம் தேவையில்லை. உளப்பூர்வமாக அனைவருக்கும் சேவையாற்றுவோம்”, என்றவர் டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த இரகசிய கூட்டத்தில் பெர்சத்து தலைவரும் உள்துறை அமைச்சருமான முகைதின் யாசின், உச்சமன்ற உறுப்பினரும் கல்வி அமைச்சருமான மஸ்லி மாலிக், பேராக் மந்திரி புசார் அஹமட் பைசல் அஸுமு முதலானோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் நடத்தப்பட்டதன் நோக்கம் என்னவென்பதை சைட் சாதிக் குறிப்பிடவில்லை.