பேருந்து மூலம் பயணிகளிடம் குப்பை சேகரிக்கும் விநோத நடைமுறை!

இந்தோனேஷியாவில், பேருந்து மூலம் பயணிகளிடம் குப்பை சேகரிக்கும் வித்தியாசமான நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. உலகளவில் ஆண்டு தோறும் சுமார் 8 மில்லியன் டன் குப்பைகள் கடலில் சேகரமாகிறது.

கடல் சுற்றுசூழல் மாசு ஏற்படுத்தும் நாடுகளில், சீனாவுக்கு அடுத்தப்படியாக, இந்தோனேஷியா இருந்து வரும் நிலையில், வருகிற 2025ம் ஆண்டுக்குள், கடலில் சேகரமாகும் 70 சதவீதம் குப்பைகளை குறைக்க இந்தோனேஷியா முடிவு செய்துள்ளது.

அதற்கு ஏற்ப அந்நாட்டு அரசு, மக்களிடம் இருந்து பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனுடன் ‘சுராபயா’ என்ற திட்டத்தின் கீழ் அரசு தற்போது அரசு பேருந்துகளை பயன்படுத்தியும், குப்பைகளை சேகரிக்கிறது.

அந்தவகையில் சுராபயா நகரில் பேருந்து கட்டணம் செலுத்தி பயணம் மேற்கொள்ளும் பயணிகள், தாங்கள் கொண்டு வரும் குப்பைகளை, டிக்கெட் வழங்கும் அதிகாரியிடம் கொடுத்துவிட்டு, விரும்பும் இடங்களுக்கு பயணிக்கலாம்.

இந்த குப்பைகள் பின்னர் ஒட்டுமொத்தமாக, மறுசுழற்சி செய்யும் நிறுவனத்துக்கு ஏலம் விடப்படுகிறது.
அரசின் இந்த புதிய முயற்சி வெற்றிப்பெற்று வருவதாக தெரிவிக்கும் போக்குவரத்து அதிகாரிகள், இதற்கென மக்கள் சொந்த வாகனங்களை விடுத்து அரசு பேருந்துகளை பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசலும் தவிர்க்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

-athirvu.in