இந்தியா – பாகிஸ்தானுக்கு சீனா வலியுறுத்தல்!

இந்தியாவும், பாகிஸ்தானும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சீனா வலியுறுத்தியுள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்த விவகாரத்தை ஐ.நா.பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்லப்போவதாகத் தெரிவித்தது.

இந்நிலையில் காஷ்மீர் பிரச்சினையில் தங்களுக்கு உதவக் கோரி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி பீஜிங் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கையில் இருநாடுகளும் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்றும், அமைதியைப் பேணுவதில் இணைந்து செயல்பட வேண்டும் என்றுக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு நாடு மட்டும் ஒருதலைப்பட்சமாக சூழ்நிலையில் மாற்றத்தைக் கொண்டுவரும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

-athirvu.in