ஹாங்காங் போராட்டம்: காவல்துறை மீது பதில் தாக்குதல் மற்றும் பிற செய்திகள்

அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுடன் மீண்டுமொருமுறை மோதி உள்ளது ஹாங்காங் காவல்துறை.

கடந்த பத்து வாரங்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஹாங்காங் மக்கள் போராடி வருகிறார்கள். இதன் காரணமாக அங்கு அமைதியின்மை நிலவுகிறது. உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசியது காவல்துறை.

அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

வான் சாய் மாவட்டத்தில் போலீஸார் மீது பெட்ரோல் குண்டுகளையும், செங்கற்களையும் போராட்டக்காரர்கள் வீசினர். அரசு ஊழியர்கள் உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் காயமடைந்தனர். சுரங்கநடைபாதை ஒன்றில் போராடும் மக்களுக்கு மிக நெருக்கமாக நின்று ரப்பர் குண்டுகளால் போலீஸார் சுடும் காட்சி பதிவாகி உள்ளது.

ஹாங்காங் போராட்டம்:படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு எதிராக ஜூன் இறுதியில் போராட்டம் தொடங்கியது.

ஹாங்காங் அரசு அந்த மசோதாவை தற்காலிகமாக கைவிட்டதாக அறிவித்தவிட்டது. ஆனால், மக்கள் அந்த மசோதாவை முழுமையாக கைவிட வேண்டும் என்று கோரி போராடி வருகிறார்கள். -BBC_Tamil