நலத்திட்டங்களை அனுபவிக்கும் வெளிநாட்டினருக்கு செக்..!

அரசின் நலத்திட்டங்களை பெறும் அளவிற்கு குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள் நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதி வழங்கப்படாது என்ற அமெரிக்க அரசின் அறிவிப்பு, அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், அமெரிக்காவில் தங்கியிருந்து பணியாற்றுவதற்கான புதிய விதிமுறைகளை, அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. அமெரிக்காவில், மெக்சிக்கோ உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள், முறைபடியாகவும், அரசுக்குத் தெரியாமலும் குடியேறுகின்றனர். இவர்கள் குறைந்த ஊதியத்தில், அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர்.

தாங்கள் வாங்கும் ஊதியம் மிகவும் குறைவு என்பதால், மருத்துவக் காப்பீடு, உணவு மானிய அட்டைகள் உள்ளிட்ட அமெரிக்க அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு குறைந்த ஊதியம் பெறுவோர், அரசின் நலத்திட்டங்களை பெறும் பயனாளிகளாக இருந்தாலும், அவர்கள், நிரந்தரமாக வசிக்க அனுமதி வழங்கப்பட மாட்டது என அமெரிக்கா அரசு அறிவித்திருக்கிறது.

வெளிநாடுகளிலிருந்து, எச்.1-பி விசா உள்ளிட்டவற்றில் அமெரிக்காவிற்கு வந்து தங்கள் சுய திறமையால் உழைத்து, அமெரிக்காவின் வளர்ச்சியில் பங்குபெற்று, அதிக ஊதியம் பெற்று வரி செலுத்துவோரை பாதுகாக்க இந்த நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

வெறுமனே, வேலைக்கு என வந்துவிட்டு, குறைந்த ஊதியம் பெற்றுக் கொண்டு, அமெரிக்க குடிமக்களுக்கான அரசின் நலத்திட்டங்களை அனுபவித்துக் கொண்டு காலம் கடத்தும் வெளிநாட்டினரை கட்டுப்படுத்தும் வகையிலும், இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும், அமெரிக்கா அரசு கூறியிருக்கிறது.

-https://athirvu.in