ஹாங்காங் விமான நிலையத்தில் போராட்டக்காரர்கள் கலவர போலீசுடன் மோதல்: பின்னணி என்ன?

ஹாங்காங் விமானநிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது என்பது ஒற்றை வரி செய்தி. இந்த ஒற்றை வரி செய்தியை ஆராய்ந்தால் ஹாங்காங்கில் கடந்த சில மாதங்களாக நடப்பதை நாம் விரிவாக புரிந்து கொள்ள முடியும்.

ஹாங்காங்கின் பிரச்சனையை சர்வதேச சமூகத்திற்கு எடுத்து செல்ல அவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டார்கள்.

போராட்டக்காரர்களுக்கும், கலவரப் போலீசுக்கும் இடையே நடந்த மோதலால் ஹாங்காங் விமான நிலையத்தில் இரவு முழுவதும் குழப்பம் நிலவியது.

போலீஸ் நடவடிக்கைக்கு பின் விமானநிலையத்திலிருந்து போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள்.

என்ன நடக்கிறது ஹாங்காங்கில்?

சரி என்ன தான் நடக்கிறது ஹாங்காங்கில்?

ஏன் அங்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது?

இந்த கேள்விக்கான விடையை புரிந்து கொள்ள வேண்டுமானால், அந்நாட்டின் 150 ஆண்டுகால அரசியல் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹாங்காங் தீவானது 150 ஆண்டுகாலம் பிரிட்டனின் காலனியாக இருந்தது.

கேரி லாம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionகேரி லாம்

1842 ஆம் அண்டு நடந்த போரில் ஹாங்காங்கின் சில பகுதிகளை பிரிட்டன் கைபற்றியது.

பின், மேலும் சில பகுதிகளை 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனா பிரிட்டனிடம் ஒப்படைத்தது.

1950களில் ஹாங்காங்கின் துறைமுகம் அந்த பகுதியின் முக்கிய வணிக தளமாக மாறியது. அந்த சமயத்தில் ஹாங்காங்கின் பொருளாதாரம் புத்தெழுச்சி பெற்றது.

அதேசமயம் ஏராளமான அகதிகள், வறுமையில் உழன்றவர்கள், சீனாவில் தண்டனைக்கு உள்ளானவர்கள் ஹாங்காங்கிற்கு பயணித்தார்கள்.

இப்படியான சூழலில், 99 ஆண்டுகால குத்தகை முடியும் தருணம் நெருங்கிக் கொண்டிருந்தது.

1980களில் ஹாங்காங்கின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய பிரிட்டனும் சீனாவும் பேச்சுவார்த்தையில் இறங்கின.

முழுமையாக ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென சீனா கோரியது.

ஹாங்காங் பிரச்சனை மூன்று நிமிட வாசிப்பில் விரிவான விளக்கம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

1984ம் ஆண்டு ஒரு முடிவு எட்டப்பட்டது. 1997ம் ஆண்டு ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டப்படும் “ஒரு தேசம், இரண்டு அமைப்பு” என்ற முறையில் ஹான்ஹ்காங் இயங்கும் என முடிவு செய்யப்பட்டது.

அதாவது, சீனாவின் ஒரு பகுதியாக ஹாங்காங் இருக்கும். அதே சமயம் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை தவிர்த்து சுயாட்சியாக ஹாங்காங் இயங்கும்.

இதன் காரணமாக சீனாவில் இல்லாத சுதந்திரத்தை, ஹாங்காங் மக்கள் அனுபவிக்கிறார்கள்.

ஆனால், அதே நேரம் ஹாங்காங் நிர்வாக தலைவரை நேரடியாக ஹாங்காங் மக்கள் தேர்ந்தெடுக்க முடியாது.

1,200 பேர் கொண்ட தேர்தல் குழுவால்தான் ஹாங்காங் நிர்வாகத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

ஹாங்காங் தலைவரை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் 2014ம் ஆண்டு ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டம் ஹாங்காங்கில் முன்னெடுக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், அரசு தலைமையகங்களின் முன்னால் இருந்த வளாகங்களை சட்டபூர்வமற்ற முறையில் ஆக்கிரமித்த ஜோசுவா வொங், அலெக்ஸ் சொவ் மற்றும் நாதன் லா உள்ளிட்ட இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Hongkongபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தப் போராட்டம், குடை (அம்பிரல்லா) இயக்கம் என்று கூறப்படும் ஜனநாயக போராட்டத்திற்கு இட்டுச் சென்றது. இதில் சீனாவால் ஆளப்பட்டுவரும் தங்களது நிலப்பரப்பில் ஜனநாயக மாற்றம் நிகழ வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான ஹாங்காங் மக்கள் இணைத்து கொண்டனர்.

ஆனால், இந்தப் போராட்டமும் சீனாவால் ஒடுக்கப்பட்டது.

இந்த சூழலில், ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்க வழிவகுக்கும் மசோதா ஒன்றை 2019 ஏப்ரல் மாதம் அந்நாடு அறிமுகப்படுத்தியது.

இதற்கு ஹாங்காங் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

ஹாங்காங் பிரச்சனை மூன்று நிமிட வாசிப்பில் விரிவான விளக்கம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இதன் மூலமாக பழவாங்கப்படுவார்கள். சீன நீதிமன்ற முறைகளினால் அவர்கள் மோசமான சித்திரவதைகளை அனுபவிப்பார்கள் என அந்நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டி வீதிக்கு வந்து போராட தொடங்கினார்கள்.

சீனா முழுமையாக ஹாங்காங்கை கட்டுப்படுத்த நினைக்கிறது என்ற வாதத்தையும் விமர்சகர்கள் முன் வைத்தார்கள்.

முதலில் சாதாரணமாக தொடங்கிய போராட்டத்தில் நாட்கள் செல்ல செல்ல லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றார்கள்.

ஹாங்காங் பிரச்சனை மூன்று நிமிட வாசிப்பில் விரிவான விளக்கம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

வணிகர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஜனநாயகத்திற்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் மத குழுக்கள் என சமூகத்தின் அனைத்து பிரிவினரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அரசு நிர்வாகம் நடக்கும் பகுதியில் அவர்கள் போராட்டத்தை மேற்கொண்டதால் மொத்த நாடும் ஒரு கட்டத்தில் ஸ்தம்பித்தது.

ஜனநாயகத்திற்கு ஆதரவான ஹாங்காங் மக்களின் போராட்டத்தின் குறியீடான குடையும் இந்தப் போராட்டத்தில் ஓர் அங்கமானது.

போராட்டத்தில் பங்கேற்ற போராட்டக்காரர்கள், “இது தீய சட்டம். இது ஹாங்காங்கிற்கு வாழ்வா சாவா போராட்டம். அதனால்தான் வீதிக்கு வந்து போராடுகிறோம். சர்வதேச நிதி மையமாக இருக்கும் ஹாங்காங்கின் மரியாதையை மட்டும் இந்த சட்டம் கெடுக்கவில்லை. நீதி அமைப்பின் மீதும் இது தாக்கம் செலுத்துகிறது.” என்று தெரிவித்தனர்.

ஹாங்காங் பிரச்சனை மூன்று நிமிட வாசிப்பில் விரிவான விளக்கம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஒரு நீண்ட போராட்டத்திற்கு பின் ஜூலை மாதம், இந்த சட்ட மசோதாவை தற்காலிகமாக கைவிடுவதாக ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவர் கேரி லேம் அறிவித்தார்.

எப்படியாக இருந்தாலும் ஹாங்காங், சீனாவின் கட்டுப்பாட்டில்தானே உள்ளது. பின் ஏன் இந்த சட்ட திருத்தமென சந்தேகம் ஏற்படலாம்.

இந்த சந்தேகத்தை தீர்க்க ஹாங்காங் குறித்து அடிப்படையான சில தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

பிரிட்டனின் காலனி நாடாக இருந்த ஹாங்காங், 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டப் பின் ஒரு தேசம், இரண்டு அமைப்பு முறைகளை கொண்டு இயங்கி வருகிறது.

ஹாங்காங் பிரச்சனை மூன்று நிமிட வாசிப்பில் விரிவான விளக்கம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஹாங்காங்கிற்கு என்று தனிச்சட்டம் உள்ளது. சீன மக்களுக்கு கிடைக்காத ஜனநாயக சுதந்திரம் ஹாங்காங் மக்களுக்கு உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 20 நாடுகளுடன் ஹாங்காங் குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டத்தை போட்டுள்ளது. ஆனால், அது போன்ற சட்ட ஒப்பந்தமும் சீனாவுடன் இல்லை. இருபது ஆண்டுகளாக இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஹாங்காங் பிரச்சனை மூன்று நிமிட வாசிப்பில் விரிவான விளக்கம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சீனாவுடன் இந்த சட்ட ஒப்பந்தம் எட்டப்படாததற்கு, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சீனாவில் உள்ள மோசமான சட்டப்பாதுகாப்புதான் காரணம் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.

சரி. சட்ட மசோதாவைதான் தற்காலிகமாக கைவிடுவதாக ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவர் கூறிவிட்டாரே பின் ஏன் இன்னும் போராட்டம் அங்கு தொடர்கிறது?

போராட்டக்காரர்கள், இந்த சட்ட மசோதாவை தற்காலிகமாக கைவிடக் கூடாது. முழுமையாக் கைவிடவேண்டும் என்கிறார்கள்.

ஹாங்காங் பிரச்சனை மூன்று நிமிட வாசிப்பில் விரிவான விளக்கம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஒரு நீண்ட போராட்டத்திற்கு பின் ஜூலை மாதம், இந்த சட்ட மசோதாவை தற்காலிகமாக கைவிடுவதாக ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவர் கேரி லேம் அறிவித்தார்.

மேலும் அவர்கள், சில கோரிக்கைகளை முன் வைக்கிறார்கள்.

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்து போராட்டக்காரர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்.

போராட்டத்தின் போது மக்கள் மீது போலீஸ் வன்முறையை ஏவியதாக கூறும் போராட்டக்காரர்கள், போலீஸை விசாரிக்க வேண்டும் என்கிறார்கள்.

ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி மற்றும் சட்டமன்றத்திற்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்பதும் அவர்கள் கோரிக்கை.

சீனாவின் பொம்மையாக இருக்கும் கேரி லேம் பதவி விலக வேண்டும் என்றும் சிலர் கோருகிறார்கள்.

-BBC_Tamil