போலீஸ்: பெர்லிஸ் நிகழ்வில் ஜாகிர் பேசினால் நடவடிக்கை

சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாகிர் நாய்க் பெர்லிஸ் கூட்டத்தில் பேசுவதற்கு போலீஸ் அனுமதிக்காது.

“ஜாகிர் பெர்லிஸ் வரலாம். ஆனால், கூட்டத்தில் பேசக் கூடாது. பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும்”, என மாநில போலீஸ் தலைவர் நூர் முஷார் கூறியதாக த ஸ்டார் ஆன்லைன் அறிவித்துள்ளது.

“நாம் பல்லினங்கள் வசிக்கும் நாடு. இங்கு மற்றவர் உணர்வுகளையும் மதிக்க வேண்டும்”, என்றாரவர்.

சமயப் போதகருக்கு எதிராக 150க்கு மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருப்பதால் அவரும் அவரின் குடும்பத்தாரும் கூட்டத்தில் பேசாமல் இருப்பதே நல்லது என நூர் முஷார் கூறினார்.

இன்று   தொடங்கி   ஞாயிற்றுக்கிழமைவரை   மூன்று    நாள்களுக்கு   நடக்கும்   பெர்லிஸ் கூட்டம் மதமாறியவர்களின் மிகப் பெரிய கூட்டம் என்று கூறப்பட்டிருக்கிறது. அதில் ஜாகிரும் அவரின் மனைவி, மூன்று பிள்ளைகள் ஆகியோரும் உரையாற்றுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.