வங்கதேசம்: தீ விபத்தில் 50 ஆயிரம் பேர் வீடிழந்த பரிதாபம்

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள குடிசைப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் 15 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமாயின.

இதன் காரணமாக 50 ஆயிரம் பேர் வீடிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை பின்னிரவில் சாலண்டிகா குடிசை பகுதியில் இந்தத் தீ விபத்து நடந்தது.

தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்தன, 50 ஆயிரம் பேர் வீடிழந்த பரிதாபம்படத்தின் காப்புரிமைREUTERS

அங்கு வசிக்கும் பெரும்பாலோனர் குறைவான வருவாய் ஈட்டும் தொழிலாளர்கள். பல வீடுகளில் பிளாஸ்டிக் கூரைகள் இருந்ததால் தீ வேகமாக பரவியது.

உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தெரியவில்லை. ஆனால், பலர் படுகாயம் அடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

வீடிழந்து தவிக்கும் பல்லாயிரம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. -BBC_Tamil