பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பதவி இறங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பாசிர் கூடாங் எம்பி ஹசான் அப்துல் கரீமை பிகேஆர் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலி கடிந்து கொண்டார்.
பிகேஆர் எம்பி இப்படிப் பேசுவதை நிறுத்திக் கொண்டு அவரது தொகுதியின் மேம்பாட்டில் கவனம் செலுத்துவது நல்லது என்றார் அஸ்மின்.
டாக்டர் மகாதிர் தொடர்ந்து பிரதமராக இருப்பதை பிகேஆர் தலைமைத்துவம் வலுவாக ஆதரிக்கிறது என்றாரவர்.
“டாக்டர் மகாதிர் பிரதமராக இருக்க வேண்டும் என்பது மக்களால் கடந்த பொதுத் தேர்தலின்போதே தீர்மானிக்கப்பட்ட ஒரு விவகாரமாகும்”, என்றாரவர்.