ஈரான் எண்ணெய் கப்பலை நடுக்கடலில் சுற்றி வளைத்த பிரிட்டன் கடற்படை!

சிரியாவை நோக்கி சென்றுக் கொண்டிருந்த கிரேஸ் 1 என்ற ஈரான் எண்ணெய் கப்பலை , பறிமுதல் செய்யும்படி அமெரிக்கா கேட்டுக் கொண்டதையடுத்து ஜிப்ரால்டர் கடல்பகுதியில் பிரிட்டன் கடற்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

அக்கப்பலில் உள்ள குழுவினர் கப்பலுக்குள் சிறைவைக்கப்பட்டிருப்பதாக தமிழகத்தின் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் ஜீவானந்தம் மூலம் தெரியவந்துள்ளது. கப்பலில் பணியாற்றுவோர் அச்சத்தில் முடங்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் எட்டு பேர் கப்பலை விட்டு வெளியேற அனுமதி கோரியும் மறுக்கப்பட்டிருப்பதாகவும் தமிழகத்தைச் சேர்ந்த கப்பல் ஊழியர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியன் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் எடுத்துச் சென்றதால் இந்த கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

-athirvu.in