அம்னோவும் பாஸ் கட்சியும் செப்டம்பர் 14-இல் கூட்டுச் சாசனத்தின் மூலம் தங்கள் கூட்டணியை அறிவித்துக்கொள்ளும் நிகழ்வுக்குக் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பத்தாயிரம் பேரைத் திரட்டிக் காட்ட விரும்புகின்றன.
புத்ரா உலக வாணிக மையத்தில் நடைபெறும் அந்நிகழ்வில் மசீச, மஇகா தலைவர்களும் பாஸின் ககசான் செஜாத்ரா தோழமைக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா கூறினார்.