நவீன வசதியுடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை!

ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள, உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.

அகடெமிக் லோமோனோசோவ் Akademik Lomonosov என பெயரிடப்பட்டுள்ள அந்த ஆலையானது, விரைவில் தனது நீண்ட தூர கடல் பயணத்தை ரஷ்யாவின் வடக்கு பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி தொடங்கவுள்ளது.

இதனை செய்தியாளர்களுக்கு காண்பித்து பேட்டியளித்த, ரோசனெர்கோட்டம் (Rosenergoatom) உதவி இயக்குனர் டிமிட்ரி அலக்சீன்கோ, மிதக்கும் இந்த அணு ஆயுத ஆலையை கடல் வழியாக பல்வேறு இடங்களுக்கு நகர்த்தி, அணு ஆற்றல் தேவைப்படும் இடங்களுக்கு அதனை கொண்டு செல்லலாம் எனவும், இதனால் சுற்றுசூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.

ரஷ்யா தயாரித்துள்ள இந்த மிதக்கும் அணு ஆயுத ஆலையை பலர் பாராட்டினாலும், சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அங்கு குருக்ஸ் நீர்மூழ்கி கப்பலில், அணு ஆயுத ஆலை இயங்கியபோது 118 பேர் உயிரிழந்த பேரிழப்பு ஏற்பட்டது. இதனால் இதுபோன்ற சம்பவம் நிகழ வாய்ப்பளிக்க வேண்டாம் என எச்சரிக்கின்றனர்.

-https://athirvu.in