பொதுக்கூட்ட சட்டம் தொடர்பில் பாஸ் கட்சி அரசு மீது வழக்கு

2011ம் ஆண்டுக்கான அமைதியான பொதுக்கூட்ட மசோதாவை சமர்பித்ததின் மூலம் பிரதமரும் கூட்டரசு அரசாங்கமும் தங்களது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் எனப் பிரகடனம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளும் நீதித் துறை மறு ஆய்வு விண்ணப்பம் ஒன்றைச் சமர்பித்துள்ளது. அந்த மசோதா  அரசமைப்புக்கு முரணானது எனக் கூறுகிறது.

பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, பொருளாளர் டாக்டர் ஹாட்டா ராம்லி, மத்தியக் குழு உறுப்பினர் சுல்கெப்லி அகமட் ஆகிய மூவரும் அந்த விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துள்ளனர்.

மேலவையில் அந்த மசோதா நிறைவேற்றப்படுவதை நிறுத்துமாறு பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் ஆணையிட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

அவ்வாறு நிறுத்துவதற்கான ஆணைக்கு ஒர் மாற்று வழியாக பிரதிவாதிகள் அந்த மசோதாவை மீட்டுக் கொள்ளுமாறு செய்ய வேண்டும் அல்லது கூட்டரசு அரசமைப்புக்கு இணங்க திருத்தங்களைச் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்த வேண்டும் என்றும் அந்த மூவரும் தங்கள் விண்ணப்பத்தில் கோரியுள்ளனர்.