சரவாக்கில் மற்ற சமயங்களுக்கு ரிம30மில்லியன் ஒதுக்கீடு

சரவாக் அரசு மற்ற சமயங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உறுதிபூண்டிருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில் இவ்வாண்டு மற்ற சமய விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளும் பிரிவு(யுனிஃபோர்)க்கு மாநில அரசு ரிம30மில்லியனை ஒதுக்கியுள்ளது.

முஸ்லிம்-அல்லாதார் அவர்களின் வழிபாட்டு இல்லங்களைச் சீர்படுத்திக்கொள்ளவும் சமய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சரவாக்கில் உள்ள எல்லா இனங்களுக்கிடையிலும் சமயங்களுக்கிடையிலும் ஒற்றுமையை மேலோங்கச் செய்யவும் இந்த ஒதுக்கீடு உதவும் என முதலமைச்சர் ஆபாங் ஜொகாரி ஆபாங் ஓப்பெங் கூறினார்.

“தலைவர்கள் என்பார் முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதார் இருவரிடத்திலும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.

“சமுதாயத்தில் உள்ளோர் அவரவர் சமயத்தைப் பின்பற்றி நடந்தாலே போதும் மிகுந்த அமைதியும் நல்லிணக்கமும் நிலவும்”என்றவர் இன்று கூச்சிங்கில் யுனிஃபோருக்கு அந்தத் தொகையை வழங்கியபோது கூறினார்.

யுனிஃபோர் 2017-இல் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆண்டில் அதற்கு ரிம15மில்லியன் ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு ரிம20மில்லியன்.

-பெர்னாமா