ஒரு கப் சூடான காபியால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஒரு கப் சூடான காபியால் 326 பேர் பயணித்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவத்தில் 10 ஆயிரம் யூரோ முதல் 80 ஆயிரம் யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியின் பிராங்க்பர்டில் இருந்து மெக்சிகோவின் கேன்கன் நகருக்கு ஏர்பஸ் ஏ330 ரக விமானம் புறப்பட்டது அட்லான்டிக் கடலின் மேற்பரப்பில் பறந்துகொண்டிருந்த போது, விமானி அறையில் டிரேயில் வைக்கப்பட்ட காபி சிந்தியது.

அதை சாதாரணமாக முதலில் நினைத்த நினையில் விமானத்தைக் கட்டுப்படுத்தும் பேனல் பகுதியில் விழுந்ததால் ஆடியோ செயலிழந்தது. அத்துடன், மின்சாதனப் பொருட்கள் கருகும் வாடையும் வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பைலட் உடனடியாக விமானத்தை அயர்லாந்துக்குத் திருப்பி தரையிறக்கினார். 326 பேரும் பத்திரமாக தரையிறங்கினர்.

ஏர்பஸ் விமானங்களில் காபி வைப்பதற்கென தனி பிடிப்பான் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை மூடியும் வைக்காமல் அஜாக்கிரதையாக செயல்பட்ட 49 வயதான விமானக் கேப்டன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரியில் நடந்த இச்சம்பவம் குறித்து விமான விபத்துப் புலனாய்வு பிரிவு விசாரணையை நடத்தி வரும் நிலையில், உள்நாட்டு வான்போக்குவரத்து சட்டப்படி 10 ஆயிரம் முதல் 80 ஆயிரம் யூரோக்கள் அபராதம் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

-athirvu.in