பிரதமர்துறை துணை அமைச்சர் முகம்மட் பாரிட் முகம்மட் ரபிக் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 43.
தேசிய ஒற்றுமை மற்றும் சமுக நல்வாழ்வு துணை அமைச்சரான பாரிட், பொந்தியான் மருத்துவமனையில் காலை மணி 5.30க்கும் 6-க்குமிடையே உயிர் துறந்ததாகத் தெரிகிறது.
பெர்சத்துக் கட்சியைச் சேர்ந்த பாரிட், தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.
மாரடைப்பு காரணமாக பாரிட் இறந்தார் என ஜோகூர் மந்திரி புசார் டாக்டர் ஸஹ்ருடின் ஜமால் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டிருந்ததது.
அவர் இன்று மாலை 5.30க்கு அடக்கம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.