மசீச, தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வியாழக்கிழமையன்று நடைபெறும் அதன் மத்திய செயல் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
பாரம்பரியமாக மசீச போட்டியிட்டு வந்துள்ள அத்தொகுதியில் தன்னுடைய வேட்பாளரைக் களமிறக்குவதா அல்லது தோழமைக் கட்சியான அம்னோவுக்கு அதை விட்டுக்கொடுப்பதா என்று அக்குழு முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவுக்குச் சென்றுள்ள தலைவர் வீ கா சியோங் இன்று திரும்புவார் என்றும் திரும்பிவந்ததும் நாளைய மத்திய குழுக் கூட்டத்துக்குத் தலைமை தங்குவார் என்றும் மசீச தேசிய அமைப்புச் செயலாளர் லிங் தியான் சூன் கூறினார்