ஜிஎஸ்டி-யை மீண்டும் கொண்டுவரும் திட்டமில்லை- மகாதிர்

பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)யை மீண்டும் கொண்டுவரும் திட்டம் அரசாங்கத்துக்கு இப்போதைக்கு இல்லை என்பதைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் வலியுறுத்தினார்.

“அது குறித்து இன்னும் நாங்கள் விவாதிக்கவில்லை.

“அது குறித்து (அரசாங்கம் ஜிஎஸ்டி-யைத் திரும்பக் கொண்டு வருவது பற்றி) ஆலோசிக்குமா என்று செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது அது மக்களின் விருப்பமானால் , மக்களின் விருப்பத்தை மதிக்கும் நாங்கள் அதை ஆராய்வோம் என்று பதிலளித்தேன்”, என்றாரவர்.