அன்வார் சரியான முடிவைச் செய்துள்ளாரா?

 “குற்றச்சாட்டை நிரூபிக்கும் சுமையை சைபுலிடம் மாற்றி விட்டது, அன்வாரின் சரியான முடிவா? உங்களுக்கு காயத்தை ஏற்படுத்துவதாக நீங்கள் யார் மீதாவது குற்றம் சாட்டினால் அதனை நிரூபிக்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும்.”

 

 

 

“நான் சைபுலுடன் உடலுறவு கொள்ளவில்லை”

பெர்ட் தான்: விசாரணை நீதிபதி, அரசு வழக்குரைஞர்கள் ஆகியோருடைய நேர்மையற்ற போக்குக்கு எதிராகவே அன்வார் வாக்குமூலத்தில் பெரும்பகுதி அமைந்துள்ளது.

தாம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என எதிர்த்தரப்புத் தலைவர் கூறும் போது அவருக்கு முன்னர் அமர்ந்துள்ள நீதிபதி முகமட் ஜபிடின் முகமட் டியா மனதில் என்ன ஒடிக் கொண்டிருக்கும்?

தவறானது எனக் கருதப்படும் பல முடிவுகளை அவர் வழங்கியுள்ளார். அவற்றில் சில விஷயங்கள் சாதாரண மனிதருக்குக் கூடத் தெரியும். ஆனால் படித்த நீதிபதிக்கு எட்டவில்லை.

இசா@பென்யூ: வழக்கம் போல அன்வார், பொய்களும் வதந்திகளும் நிறைந்த அரசியல் உரையை நிகழ்த்தியுள்ளார். பேட்டி காணப்படுவதற்கு மறுப்புத் தெரிவிப்பது உரிமை ஆகும். ஆனால் நஜிப்பும் ரோஸ்மாவும் நீதிமன்றத்துக்குச் செல்ல மறுத்தால் அது குற்றமா?

உண்மை வெளி வந்து விடும் என அஞ்சுவதால் அன்வார் குறுக்கு விசாரணையைத் தவிர்த்துள்ளார்.

அடையாளம் இல்லாதவன்_408b: விசாரணைச் சட்டங்கள் ஒரு முட்டாளுக்கு மட்டுமே தெரியாமல் இருக்கும். நீங்கள் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என அஞ்சுவதால் குற்றம் சாட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து வாக்குமூலம் கொடுப்பதால் நீதிமன்றம் அதனை ஏன் அனுமதிக்க வேண்டும்?

ஒங்: நானும் அன்வாரை விரும்பவில்லை. அவருடைய அம்னோ நாட்களிலிருந்து இன்று வரை அவரை எனக்குப் பிடிக்காது.

என்றாலும் அவருக்கு எதிராக நடக்கும் விசாரணையில் காணப்படும் தாறுமாறான நிகழ்வுகள் என்னைப் பார்வையற்றவனாக்கவில்லை.

அடையாளம் இல்லாதவன்: உண்மை உன் பக்கம் இருப்பதால் உனக்கு துணிச்சல் இருக்கிறது. நீங்கள் தவறு செய்திருப்பதால் அஞ்சுகின்றீர்கள். குறுக்கு விசாரணை செய்யப்படுவதற்கு அன்வார் ஏன் பயப்படுகிறார்?

சின் து லான்: “சூரியன், சந்திரன், உண்மை ஆகிய முன்று விஷயங்களை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது.” (புத்தர்)

அடையாளம் இல்லாதவன்_3e4b: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரது மனைவி ரோஸ்மா மான்சோர், முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான், முன்னாள் மலாக்கா போலீஸ் படைத் தலைவர் முகமட் ரோட்வான் முகமட் யூசோப் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவருடன் ஒத்துழைக்க மறுப்பது, உண்மை வெளிவருவதைக் காண அவர்கள் விரும்பவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அரசியல் ரீதியில் அன்வாரைத் தாக்குவதே அவர்களது முக்கிய நோக்கமாகும்.

பி தேவ் ஆனந்த் பிள்ளை: குற்றம் சாட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து வாக்குமூலம் கொடுப்பது சாட்சியமளிப்பது குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமையாகும். இந்த நீதிமன்றத்திலிருந்து தமக்கு நீதி கிடைக்கப் போவதில்லை என்பதை  நன்கு அறிந்துள்ள அன்வார் சரியான முடிவைச் செய்துள்ளார்.

இந்த முறையைப் பயன்படுத்துவதின் மூலம் நாணயத்தின் மறுபக்கத்தை எல்லோரும் பார்க்க வழி பிறந்துள்ளது.

ஷிஸ்: குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டிய பொறுப்பை புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானுக்குத் தள்ளி விட்டதின் மூலம் அன்வார் சரியான நடவடிக்கை எடுத்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து அவர் வாக்குமூலம் அளித்த போது அது தெரிய வந்துள்ளது.

எது எப்படி இருந்தாலும் அன்வார் கூறுவது போல குற்றச்சாட்டு பழையது- ஒரே ஆட்டக்காரர்கள், ஒரே நாடகம். அதனை ஏன் குதப்புணர்ச்சி வழக்கு 2 என ஏன் அழைக்க வேண்டும்.

அதனை இப்படிப் பாருங்களேன் – உங்களுக்கு காயத்தை ஏற்படுத்துவதாக நீங்கள் யார் மீதாவது குற்றம் சாட்டினால் அதனை நிரூபிக்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும்.