வரிகளைக் குறைத்து உதவித்தொகையை அதிகரிப்பது நடவாத செயல்- பிரதமர்

அரசாங்கம் ஒரே நேரத்தில் வரிகளைக் குறைப்பதும் உதவித் தொகையை அதிகரிப்பதும் சாத்தியமற்றது என்கிறார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.

“வரிகள் குறைவாக இருப்பதையும் உதவித் தொகை அதிகரிப்படுவதையும்தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால், வரிகளைக் குறைத்து அதே நேரத்தில் உதவித் தொகையை அதிகரிப்பது நடக்கக் கூடியதல்ல.

“அரசாங்கத்துக்குப் பணம் தேவை. பணமிருந்தால்தான் உதவித் தொகை கொடுக்க முடியும்.

“வரிகளை வெகுவாகக் குறைத்தால் உதவித் தொகை வழங்க பணம் இருக்காது”, என்று பிரதமர் செய்தியாளர்களிடம் கூறினார்.

வரிகளைப் பொருத்தவரை உயர் வருமானம் பெறுவோருக்குத்தான் வரி விதிக்கப்படுகிறது என்றாரவர்.

அதே நேரத்தில் உதவித் தொகை கொடுப்பது விரிவுபடுத்தபப்டும் என்று கூறிய மகாதிர், யார் உதவித் தொகை பெறத் தகுதியானவர்கள் என்று அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு உதவி வழங்கப்படும் என்றார்.