அன்வாரும் அஸ்மினும் ஒன்றாக அமர்ந்து காப்பி அருந்தினர்

சர்ச்சையிட்டுக் கொண்டிருக்கும் பிகேஆர் உயர்த் தலைவர்கள் இருவரும் இன்று காலை நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கொண்டனர்.

அச்சந்திப்பில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், துணைத் தலைவர் ஆகிய இருவருடன் கட்சித் தலைமைச் செயலாளர் சைபுடின் அலியும் சேர்ந்து கொண்டார்.

அதன் பின்னர் அன்வார் அச்சந்திப்பைக் காண்பிக்கும் படமொன்றை அவரது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

“நாடாளுமன்ற ஓய்விடத்தில் துணைத் தலைவருடனும் தலைமைச் செயலாளருடனும் காப்பி அருந்துகிறேன்”, என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அச்சந்திப்பை நேரடியாகப் பார்த்த ஒருவர் சந்திப்பு அமைதியாக நடந்ததாகக் கூறினார். அது 30 நிமிடம் நீடித்தது. ஆனால், அவ்விருவரும் என்ன பேசினார்கள் என்பதைத்தான் அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை.