பிரதமர் துறை வளாகம், “செத்தியா பெர்டானா”வாக மாறுகிறது

புத்ராஜெயா, ஜனவரி 20 – இங்குள்ள பார்சல் பி-யில் உள்ள பிரதமர் துறை (ஜே.பி.எம்) வளாகம், அதன் பெயரை பிப்ரவரி 1 முதல் “செத்தியா பெர்டானா” வளாகம் என மாற்றியமைக்கும்.

ஜேபிஎம், இன்று ஒரு அறிக்கையில், இப்பெயர் மாற்றத்துடன், வளாகத்தில் உள்ள எட்டு கட்டிடங்களும் (புளோக் 1 முதல் 8 வரை) செத்தியா பெர்டானா 1 முதல் 8 வரை என இனி அறியப்படும்.

“இது அரசாங்கத்தின் வளாகங்களை மறுபெயரிடுவதற்கு எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகும். முன்பு இவை “பார்சல் ஏ” முதல் “எஃப்” (Parcel A to F) என அழைக்கப்பட்டன.