நஜிப்பின் பேருரை, மூன்றாம் உலக மனப்போக்கின் உருவகம்

“அம்னோவின் நடத்தை பற்றி உயர்வான எண்ணம் என்றும் இருந்ததில்லை, என்றாலும் ஒரு பிரதமர் அவ்வளவு தரக்குறைவாக பேசுவதைக் கேட்டு அதிர்ந்து போனேன்.”

 

“மடத்தனம் மிக்க” பாஸ் பக்காத்தானிலிருந்து வெளியேறத் தயரா- சவால் விடுகிறார் நஜிப்

பெயரிலி_4041: அடக் கடவுளே! என்ன, பிரதமர் ஐயா, நஜிப் அப்துல் ரசாக்? அம்னோ பேராளர் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல திட்டங்களைக் கோடிட்டு காட்டும் என்று எதிர்பார்த்தால் முழுக்க முழுக்க தனிப்பட்டவர்களைத் தாக்குவதில்  அல்லவா குறியாக இருந்தது.

இதைவிட நல்லதாக எதையும் சொல்லத் தெரியாதா உங்களுக்கு? அல்லது நம்பிக்கை இழந்து, புத்தி பேதலித்து வாய்க்கு வந்ததையெல்லாம் பேசத் தொடங்கி விட்டீர்களா? இப்படி இருந்தால் எப்படி உங்களுக்கு மறுபடியும் வாக்களிப்பது? நஜிப், உங்களை எண்ணி நீங்களே வெட்கப்பட வேண்டும்.

க்லியோ: சில நேரங்களில் நஜிப்பிடம் மிதவாதம் சிறிதளவு, சிறிதளவாவது மிச்சம் மீதியிருக்கும் ஆனால் பெருக்கெடுத்தோடும் அம்னோபுத்ரர்களின் எதிர்மறை கருத்தோட்டத்தில் அது மூழ்கி மறைந்து விடுகிறது என்று நினைத்து என்னை நானே ஏமாற்றிக்கொள்வது உண்டு.

ஆனால், ஒவ்வொரு தடவையும் என் நினைப்பு தவறு என்பதை நஜிப் தவறாமல் நிரூபித்து வருகிறார். அம்னோ பேரவையில் அவரது பேச்சு, அவருக்கு முன் இருந்த தலைவர்களின் மாண்பும் கண்ணியமும் இவரிடம் இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியது. மூன்றாம் உலக மனநிலையின் உருவகமாக அது அமைந்திருந்தது.

லின்: பேரவையை முடித்துவைத்து நஜிப் ஆற்றிய உரை, ஒரு நாட்டுப் பிரதமர் ஆற்றும் கண்ணியமிக்க உரை போன்றா இருந்தது?….இல்லையே. ஒரு பள்ளி மாணவன், தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றுவிட்ட பரம வைரியான தன் சக மாணவனைப் பார்த்து பொறாமை படுவதுபோல இருந்தது. அம்னோவின் நடத்தை பற்றி உயர்வான எண்ணம் கிடையாதுதான் என்றாலும் ஒரு பிரதமர் அவ்வளவு தரக்குறைவாக பேசுவதைக் கேட்டு அதிர்ந்து போனேன்.

அவர் மாற்றரசுக் கட்சியில் இல்லை. அம்னோ ஆளும் கட்சி. அது முரட்டுத்தனத்தில் இறங்கி, தரக்குறைவாக நடந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அப்படித்தான் அது நடந்துகொள்கிறது. பயந்து போயிருக்கிறார்கள் போலும்.

பென்-காஜி: அம்னோ/பிஎன் கதை முடிந்தது. ஹஜ்ஜுக்குப் போய் வந்தவர் கண்ணியத்தையும் மேன்மையையும் அரசியல் விவேகத்தையும் காண்பிப்பார் என்று பார்த்தால் மாறியதற்கான அடையாளமே இல்லை.

எதிரிகளைத் தாக்கிப்பேசும்போது நஞ்சைக் கொட்டுகிறார். தரக்குறைவாக பேசுகிறார். பேரவையில் குழுமியிருந்த  கோமாளிக் கூட்டத்தாரின் “ஆரவாரமான பாராட்டுகளில்” மதி மயங்கிப் போனார் போலும்.

அம்னோ தலைவர்களும் பேராளர்களும் பேசிய பேச்சுக்களைக் கேட்ட வாக்காளர்களில் பலர் இந்நேரம் எப்படி வாக்களிப்பது என்பதை முடிவு செய்திருப்பார்கள். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆட்சியைக் கொடுக்கும் அளவுக்கு அவர்களிடம் பக்குவம் காணப்படவில்லை. எப்படி வாக்களிப்பது என்பதை நான் முடிவு செய்து விட்டேன். நீங்கள்?

நியாயவான்: நஜிப், உங்கள் உரை நீங்கள் நம்பிக்கை இழந்திருப்பதைக் காண்பிக்கிறது. தேர்தலில் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கை உங்களிடம் இல்லை. மக்களை ஏமாற்றியும் கொள்ளையிட்டும் வந்திருக்கிறீர்கள்.தொடர்ந்து பொய்யுரைத்தும் வந்திருக்கிறீர்கள். மடத்தனம் மிக்கது அம்னோதான், பாஸ் அல்ல. ஓர் அரசியல் கட்சிக்கு அழகு தனக்குத் தேவையானதைச் செய்துகொள்வதல்ல; மக்களுக்குத் தேவையானதைச் செய்வதுதான்.

அதைத்தான் பாஸ் செய்கிறது. அது டிஏபியுடன் கைகோக்கிறது. ஏனென்றால் மக்களுக்கு எது நல்லது என்பது அதுக்குத் தெரியும்.

குயினி: இந்தப் பேச்செல்லாம் நம் பிரதமரின் சிந்தனை அவ்வளவு தரம்தாழ்ந்து போயுள்ளது என்பதைத்தான் காண்பிக்கிறது. நான்கு தடவை திருக்குர் ஆனின் சத்தியம் செய்துவிட்டால் நேர்மையானர் ஆகிவிடுவாரா?

கலா: ஒரு தலைவர் என்ற முறையில் புத்திசாலித்தனமான பேச்சை எதிர்பார்த்தோம். ஆனால், இவ்வளவு தரக்குறைவாக, “ஐந்தடித்தனாமான” பேச்சாக இருக்கும் என்று நினைக்கவில்லை.

என்: ஒரு “தரக்குறைவான” பிரதமரின் “தரக்குறைவான பேச்சு”.

TAGS: