அமைச்சரவையின் பட்டியலை இன்று அறிவிக்கிறார் முகிதீன்

அமைச்சரவையின் பட்டியலை இன்று அறிவிக்கிறார் முகிதீன்

அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் முகிதீன் யாசினின் அமைச்சரவை பட்டியல் இன்னும் சில மணி நேரத்தில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையின்படி, முகிதீன் காலை 11 மணிக்கு அரண்மனையில் பேரரசர் யாங் டி-பெர்த்துவான் அகோங்கை சந்திக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. முகிதீனின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களின் புதிய பட்டியலை அங்கே வழங்குவார்.

“அகோங்கின் ஒப்புதலைத் தொடர்ந்து, பிரதம மந்திரி பட்டியலை இன்று மாலை 5 மணிக்கு புத்ராஜெயாவில் உள்ள அவரது அலுவலகத்தில் அறிவிப்பார்” என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று பிரதமர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.