வாஷிங்டன்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்காக விசா வழங்கப்படும் நடவடிக்கைகள் மார்ச் 16 முதல் நிறுத்தி வைக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவில் மட்டும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா அச்சுறுத்தல், அமெரிக்காவில் தேசிய அவசர நிலையாக அறிவித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மற்றுமொரு நடவடிக்கையாக, மார்ச் 16 முதல், இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்கப்படுவது நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள தூதரகங்களில் விசா வழங்கும் நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
dinamalar